fbpx
Homeபிற செய்திகள்அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

அரசு மகளிர் பள்ளியில் ஆசிரியர் தினவிழா

கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார்.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நவாப் முன்னிலை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தர்மன் வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், பள்ளியின் குறுவள மையத்திற்குட்பட்ட, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர் மரியரோஸ், அரிமா சிவக்குமார் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியையகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிகளை அரிமா சங்க முன்னாள் தலைவரும், பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான மரகதவேல் தொகுத்து வழங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img