கோவையில் விவசா யிகள் குறைகேட்புக் கூட் டம் இணைய வழியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 27) நடைபெறவுள்ளதாக ஆட்சியர் சமீரன் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் பிரச்சி னைகளுக்கு தீர்வு காணும் விதமாக இணைய வழி வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 27) காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெறவுள்ளது.
இக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். எனவே விவசாயிகள் இதில் பங்கேற்று தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
இணைய வழி குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் விரி வாக்க மையங்களில் காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த இணையவழி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடைமுறைகளை தவ றாமல் பின்பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனு வாக எழுதி அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.



