தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு குறித்து குழந்தைகளிடையே விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘வள்ளியின் மலைப்பயணம்’ என்ற காமிக்ஸ் புத்தகத்தை உலக இயற்கை நிதியம் உருவாக்கியுள்ளது.
அதனை விஸ்வநாத் ஆனந்த், கல் வியாளர் மதுரா விஸ் வேஸ்வரன் ஆகியோர் வெளியிட்டனர். உலக இயற்கை நிதியம் சார்பில், ‘வள்ளியின் பயணம்’ என்ற குழந்தைகளுக்கான புத்தக வெளியீட்டு விழா இணைய வழியில் நேற்று மதியம் நடைபெற்றது.
வண்ண வண்ண ஓவியங்களும், சுவாரசியமான கதை நடையும் கொண்ட இந்த நூலின் தமிழ் மற்றும் ஆங் கிலப் பிரதிகளை செஸ் கிராண்ட் மாஸ்டரும், உலக இயற்கை கல்வி தூதருமான விஸ்வநாதன் ஆனந்த், கல்வியாளர் மதுரா விஸ்வேஸ்வரன் ஆகியோர் வெளியிட் டனர்.
நிகழ்ச்சியில் விஸ்வநாத் ஆனந்த் பேசியதாவது: வருங்கால தலைமுறையான குழந்தை களை இயற்கையை நோக்கி அழைத்துச் செல் வதே இயற்கையைப் பாது காப்பதற்கான சிறந்த வழி என்று நம்புகிறேன். அந்த வகையில் இந்தப் புத்தகம் குழந்தைகளை இயற் கையின் பால் ஈர்த்து, அவர்களை இயற்கை ஆர் வலர்களாக மாற்றும்.
வள்ளி என்ற மாணவி தன் வகுப்புத் தோழர்களுடன், கல் விச் சுற்றுலாவாக மலைத்தொடருக்குச் செல்கிறாள். அங்கே இயற்கைக் காட்சியையும், விலங்குகளையும் பார்க்கிற அவள், அரிய விலங்கினமான வரையாட் டையும் பார்க்கிறாள்.
ஓங்கி உயர்ந்த செங்குத்தான பாறைகளின் முகடுகளில் அனாசயமாக துள்ளி ஓடி, புற்களை மேய்கிற வரையாடுகளைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்வதும், அறிந்துகொள்வதும்தான் புத்தகத்தின் மையம்.
அந்த மாணவர்களுக்கு இந்தப் பயணத்தின் மூலம் இயற்கையின் பால் ஏற்படுகிற புரிதல், காமிக்ஸ் வாசிக்கிற குழந் தைகளுக்கும் ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ், இயற்கை நிதியத்தின் தலைமை செயல்பாட்டு அலுவலர் கரண் பல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச் சியை அ.ஸ்ரீகுமார் ஒருங் கிணைத்தார்.



