திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், காங்கேயம்பாளையம் ஊராட்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளின் விளை நிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் செய்தி யாளர்களிடம் தெரி வித்தாவது:
திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறைகள் மூலம் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களின் உறபத் தியை பெருக்கவும், விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் வளர்த்தல் இனத்தின் கீழ் பசுமைக்குடில் அமைக்க விவசாயிகளுக்கு 2020-21-ம் ஆண்டிற்கு தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி இயக்க திட்டத்தின் கீழ் பசுமைக்குடில் அமைக்க 4000 ச.மீ. பொருள் இலக்கு நிர்ணயித்து ரூ.18.25 இலட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டது.
மேற்காணும் இலக்கு மடத்துக்குளம், குண்டடம் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றி யங்களுக்கு பிரித்தளிக்கப்பட்டது.
குண்டடம் ஊராட்சி ஒன்றியத் திற்கு 2000 ச.மீ. வழங்கப்பட்டு ரூ.8.9 இலட்சம் மானியம் வழங்கப்பட் டுள்ளது. அதே போல் 2021-22-ம் ஆண்டுக்கு தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி இயக்க திட்டத்தில் (பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் வளர்த்தல்) இனத்தின் கீழ் பசுமைக்குடில் அமைக்க 6000 ச.மீ. பொருள் இலக்கும் ரூ.28.050 இலட்சம் நிதி இலக்கும் பெறப்பட்டு மடத்துக்குளம் வட்டாரத்திற்கு வழங்கப்பட்டு 2000 ச.மீட்டருக்கு பயனாளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
4000 ச.மீட்டருக்கு பயனாளி தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2021-22 நிதி ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உயர்விளைச்சல் இரக விதைகள், நுண்ணூட்டா சத்து, உயிர் உரங்கள், பயிர்பாதுகாப்பு மருந்துகள், களைக்கொல்லி ரோட்டவேட்டர், விசைத்தெளிப்பான், கைத்தெளிப்பான், பைப்லைன் மற்றும் தார் பாய்கள் மானிய விலையில் விநி யோகம் செய்ய ரூ.171 இலட்சங்கள் இலக்கு பெறப்பட்டு தற்சமயம் வரை ரூ.12.3 இலட்சம் மானிய உதவிகள் 480 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் விதை உற்பத்தி மானியத்திற்காக ரூ.14 இலட்சங்கள் இலக்கு பெறப்பட்டு, ரூ.2.42 இலட்சம் மானிய உதவிகள் 6 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மற்றும் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கு பொருள் இலக்காக 300 எண்கள் பெறப்பட்டு விவசாயிகள் தேர்வு பணி நடைபெற்று வருகிறது.
விதை கிராமத் திட்டத்தின் கீழ் உயர்விளைச்சல் இரக விதைகள் 556 மெ.டன்கள் விநியோகம் செய்ய ரூ.17 இலட்சம் பெறப்பட்டு, 76 மெஷ்.டன் விதைகளுக்கு ரூ.3 இலட்சம் மானிய உதவிகள் 71 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் 11,300 எக்டருக்கு 16 இலட்சம் இலக்கு பெறப்பட்டுள்ளது. தற்சமயம் வரை 751 எக்டர் பரப்பிற்கு 405 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தின் கீழ் 520 எக்டருக்கு ரூ.230 இலட்சம் இலக்கு பெறப்பட்டு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 2000 எக்டர் பரப்பளவில், நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.670 இலட்சம் இலக்கு பெறப்பட்டு, 1262 எக்டர் பரப்பளவிற்கு ரூ. 304.95 இலட்சம் மானிய உதவிகள் 500 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எஸ்.வினீத் தெரிவித்தார்.
அதனடிப்படையில், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், காங்கேயம் பாளையம் ஊராட்சியில் விவசாயின் விளை நிலத்தில் அமைக்கப்பட் டுள்ள பசுமைக்குடிலை ஆய்வு செய்தார்.
திட்டம் முறையாக செயல் படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், தற்போது பசுமைக்குடிலில் பயிரிட்டுள்ள வெள்ளரி சாகுபடிக்கும் திறந்த வெளியில் சாகுபடிக்கும் உள்ள வேறுபாட்டை பற்றியும் விவசாயி களிடம் கேட்டறிந்தார் ஆட்சியர்.
ஆய்வின் போது, வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன் மற்றும் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரேமாவதி, விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



