fbpx
Homeபிற செய்திகள்சாதனை கலைஞர்களுக்கு விருதுகள் கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

சாதனை கலைஞர்களுக்கு விருதுகள் கோவை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் மாவட்டக்கலை மன்றம் சார்பில், கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு, விருதுகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி, பொன்னாடை அணி வித்து கௌரவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழகத்தின் பாரம்பரிய இசை, நாட்டியம், நாடகம், கிராமியம், நுண்கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் 18 வயதுக்குட்பட்டோருக்கான கலை இளமணி விருது, 19 வயது முதல் 35 வயது பிரிவினர்க்கான கலை வளர்மணி விருது, 36 வயது முதல் 50 வயது பிரிவினர்க்கான கலைச்சுடர்மணி விருது, 51 வயது முதல் 60 வயது பிரிவினர்க்கான கலை நன்மணி விருதுக்கு, 61 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கலை முதுமணி விருது ஆகிய 5 விருதுகள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் கிராமியக் கலையில் சிறப்புகள் பெற்றமைக்காக மா.ரா.நேகாஷ், மா.ரா.நிதிஷ் சகோதர்கள், கலை இளமணி விருதுக்கு ஓவியர் ஆர்.விக்னேஷ்ராஜ், கலை வளர்மணி விருதுக்கும், பரதநாட்டிய ஆசிரியை விஜயலட்சுமி, கலைச்சுடர்மணி விருதுக்கும், கிராமிய தவில் கலைஞர் எம்.கே. ஈஸ்வரன், கலை நன்மணி விருதுக்கும், வால்பாறையை சேர்ந்த நாடக் கலைஞர் ஆர்.கே.சாமி (எ) ஆர்.கந்தசாமி கலை முதுமணி விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் இன்று விருதுகள் வழங்கப்பட்டன.

கலை இளமணி விருதுக்கு ரூ.4000, கலை வளர்மணி விருதுக்கு ரூ.6000, கலைச்சுடர்மணி விருதுக்கு ரூ.10000, கலைநன்மணி விருதுக்கு ரூ.15000, கலை முதுமணி விருதுக்கு ரூ.20000, பரிசுதொகைக்கான காசோலைகளும் விருது பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

நம் பாரம்பரிய கலைகளான இசை, நாட்டியம், நாடகம், கிராமிய நுண்கலைகளில் சிறந்து விளங்கும் இவர்களை போன்ற கலைஞர்கள் வருங்கால தலைமுறைக்கு சிறந்த வழிகாட்டிகளாக திகழ்வதுடன், பல கலைஞர்களையும் உருவாக்க உறுது ணையாகவும் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, கலை பண் பாட்டுத் துறையின் மண்டல உதவி இயக்குநர் பா.ஹேம நாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img