சென்னிமலை யூனியன், கே.ஜி., வலசில், மத்திய அரசின் மண்டல கயிறு வாரியம், அஸ்வத் தொண்டு நிறுவனம் இணைந்து தென்னை விவசாயிகளுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு பயிற்சி முகாமை நடத்தியது.
ஈரோடு நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மண்வாசம் உழவர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சி.இ.ஓ., பரத் வரவேற்றார்.
கயிறு வாரியத்தின் மண்டல அலுவலர் பூபாலன் மத்திய கயிறு வாரித்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மத்திய, மாநில அரசு வழங்கும் கடன் திட்டங்கள், மானியங்கள், தேங்காய் மட்டை மற்றும் நார்களில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது குறித்து எடுத்து கூறினார்.
முன்னாள் கயிறு வாரிய உறுப்பினர் காந்தி, சென்னிமலை வேளாண்மை உதவி இயக்குனர் சங்கர், பரோடா வங்கி சென்னிமலை கிளை மேலாளர் சத்தியா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
அஸ்வத் தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் செல்வராஜ் நன்றி கூறினார்.
தென்னை விவசாயிகள், கயிறு சார்ந்த தொழில் புரிபவர்கள் கலந்து கொண்டனர்.



