fbpx
Homeபிற செய்திகள்கோவை தெற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை தெற்கு மண்டல பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், சாலைப் பணிகள் குறித்தும், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா (ஆக.9) பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.89-க்கு உட்பட்ட சுண் டக்காமுத்தூர் பகு தியில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்

ஆணையாளர். அவ் வலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய் துஅனைவரும் பணிக்கு வருகை தந்துள்ளார்களா என கேட்டறிந்தார். தூய்மைப்பணியாளர்கள் நேரம் தவறாமல் பணிக்கு வர வேண்டும்.
குப்பையை சேகரிக்கும் போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்க வேண்டும்.

மழைநீர் வடிகால் கால்வாய்களில் அடைக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றி, நீர் தேங்காமல் செல்லும் வகையில் கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும்.

தூய்மையான மாநகராட்சியாக திகழ பணிகளை சிறப்பாக செய்திட வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.
அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண் டும் என அறி வுரைகள் வழங்கினார்.

பின்னர், பொது மக்களிடம், சாலை யோரங்களிலும் பொது இடங்களிலும் குப்பையைக் கொட்டக் கூடாது. குப்பைத் தொட்டிகளில் மட்டுமே குப்பையை கொட்ட வேண்டும் என தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.89 இராமசெட் டிபாளையத்தில் குனிய முத்தூர் பகுதிகளுக்கு வரக்கூடிய குடிநீர் விநியோகத்திற்காக, புதியதாக கட்டப்பட்ட 15 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டியில், கேஸ் குளோரிநேஷன் மாற்றியமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரு வதை ஆய்வு செய்தார்.

வார்டு எண்.90-க்கு உட்பட்ட கோகுலம் காலனியில் அமைக் கப்பட்ட தார்சாலையின் தரம் குறித்தும், கோவைப் புதூர் பிரதான சாலையில் அமைக்கப்பட்ட தார் சாலை மற்றும் வார்டு எண்.91-க்கு உட்பட்ட ஓம்சக்தி நகரில் அமைக்கப்பட்ட சாலையின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

உக்கடம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் உக்கடம் பிரதான சாலை பகுதியில் செயல்பட்டுவரும் சில்லறை விற்பனை மீன் அங்காடியினை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் மாற்ற நடந்து வரும் கட்டிடப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

ஆய்வின்போது செயற் பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜ் மற்றும் அதி காரிகள் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img