விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில், கொ ரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும் நோக்கில், கொரோனா விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
விருதுநகர் மாவட் டத்தில் ஆக.1 முதல் 7-ம் தேதி வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு, மா வட்டத்தில் தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச் சிகளை பல்வேறு அரசு துறைகள் மூலம் ஒருங் கிணைந்து நடத்த மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவிட்டிருந்தார்.
இதில் துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள், டிவிட்டர், முகநூல் மற்றும், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலை தளங்களிலும் தொலைக்காட்சி நேர் காணலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கடைவீதிகள், ரயில் நிலையம், பேருந்துநிலையம் போன்ற மக்கள் நட மாட்டம் அதிகளவில் உள்ள இடங்களில், முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வியாபாரிகள் நலச் சங்கங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவச் சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் வேண்டும்.
மாணவர்களுக்கிடையே குறும்படப் போட்டிகள், ஒவியப் போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம். ரேடியோ மூலம் கேள்வி பதில்நிகழ்ச்சிகள், மீம்ஸ் உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கவும், கிராம அளவில், நூறு சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவும் வேண்டும்.
இதுபோன்ற விழிப் புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் காரியாபட்டி பேருந்து நிலையத்தில் சுகா தாரத்துறை, வரு வாய்த்துறை, காவல்துறை, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
இதில் விருதுநகர் நேரு யுவகேந்திராவுடன் இணைக்கப்பட்ட காரியாபட்டி அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து கூறி, தடுப்பூசி போட வைத்தனர்.
மக்களுக்கு விழிப் புணர்வுதுண்டு பிர சுரங்களைவருவாய் வட்டாட்சியர் தனக்குமார், காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், சார்புஆய்வாளர் ஆனந்தஜோதி, சுகாதார ஆய்வாளர் கருப்பையா, பேரூராட்சி சுகாதார மேற் பார்வையாளர் ராம்குமார், எஸ்.பி.எம்.ட்ரஸ்ட் நிறுவனர்அழகர்சாமி ஆகியோர் வழங்கினர்.
அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்றத்தின் செயலாளர் அருண்குமார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



