முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், பொதுத்துறை சார்பில் பாளையங்கோட்டை மற்றும் மதுரை ரயில் நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்துடன் கூடிய மையக் கட்டிடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, பொதுத்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



