தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் மாதம் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சப்-ஜூனியர் எறிபந்து போட்டி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கரூரில் அகில இந்திய எறிபந்து கழக (Throw Ball Federation Of India) தலைவர் முனைவர் எஸ்.மணி நிருபர்களிடம் கூறியதாவது:
வரும் நவம்பர் மாதம் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி, தெலுங்கானா மாநிலத்தில் துவங்க உள்ளது. 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சப்-ஜூனியர் பிரிவில் 21 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.
தொடர்ந்து 19 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான சீனியர் பிரிவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு 2022-ல் நடைபெறுகிறது.
முன்னதாக, தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் மாதம் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சப்-ஜூனியர் பிரிவில் தேசிய அளவிலான போட்டி நடைபெற உள்ளது.
கரூர் மாவட்ட எறிபந்து கழகத்தின் மாவட்ட தலைவராக உள்ள தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆலோசனைப் படி, விரைவில் இப்போட்டி நடைபெறும் இடம், தேதி அறிவிக்கப்படும்.
மாவட்டம் தோறும் அகாடமி ஏற்படுத்தப்பட்டு வீரர்களை கண்டறியும் முகாம் நடக்கும். கரூரில் விரைவில் ஆல் இந்தியா மேளா நடத்தப்படும்.
எறிபந்து விளையாட்டு அடுத்த முறை ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
மாநில துணை தலைவர் எம்.ஏ.ஸ்காட் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜீவா நன்றி கூறினார்.



