கால்களில் ரத்தக் குழாய் அடைப்பை நீக்க புதிய சிகிச்சை முறையை கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கே.எம்.சி.ஹெச்.) அறிமுகப்படுத்தி உள்ளது.
இதயத்திலிருந்து கால்களுக்கு ரத்தம் செல்லும் ரத்த குழாயில் அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினமானது.
இந்த “பெமோரல்” ரத்தநாளத் தில் கொழுப்பு படிவதால் அடைப்பு ஏற்படுகிறது. விஞ்ஞானிகள் முதலில் பைபாஸ் சிகிச்சை முறை யில் அடைபட்டுள்ள ரத்த நாளத்தை கண்டறிந்து, அந்த பகுதியை அகற்றி, சிகிச்சை செய்தனர்.
பிறகு, பலூன் அஞ்சி யோபிளாஸ்டி முறையை பயன்படுத்தி அடைப்பு சரி செய்யப்பட்டது. பின்னர், ஸ்டென்ட் எனப்படும் உலோகத்தால் ஆன வலையை பயன்படுத்தி அடைப்பை நீக்கினர்.
“பாஸ்டன் சயின்டிபிக் கார்ப்பரேஷன்” ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை அறுவை சிகிச்சை இல்லாமல் நீக்க இந்தியாவில் புதிய வகை ‘பாக்லிடாக்செல் ஸ்டென்ட்’ஒன்றை, மருந்துடன் இணைத்து உரு வாக்கியது.
‘எலுவியா’என்ற இப்புதிய ஸ்டென்ட், இந்தி யாவில் 2021 ஜூலை 1-ல் அறிமுகமாகியுள்ளது. தென்னிந்திய அளவில் முதன் முறையாக கே.எம்.சி.ஹெச். இப்புதிய ஸ்டென்டை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொண்டுள்ளது.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமன யின் கதிரியக்க துறையின் நுண்துளை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் மாத்யு செரியன், பங்கஜ் மேத்தா, சந்தோஷ் ஆகியோர் கூறியதாவது:
சில நோயாளிகள், கால் களில் ஆறாத புண்களுடன் வருவதால் சில சமயங்களில் குணப்படுத்த முடிவதில்லை.
இது போன்ற நிலையில், சிகிச்சை அளித்திருந்தபோதும், எப்போது அடைப்பு சரியாகும் என்பதை உறுதியாக சொல்ல இயலவில்லை.
ஆனால், இப்போது அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு எவ்வித பிரச்னையும் வர வாய்ப்புகள் இல்லை என உறுதியாக சொல்ல முடி யும் என்றனர்.
கே.எம்.சி. ஹெச். தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி கூறுகையில், இந்தியளவில் மட்டுமல்லாமல் உலகளவிலும் எந்தவொரு நவீன சிகிச்சை முறை வந்தாலும் கே.எம் .சி.ஹெச்.-ல் நமது பகுதி மக்கள் பயன்படும் வகையில் நவீன சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.



