இந்திய மீச்சுவல் பண்ட் தொழில் அதிவேகமான வளர்ச்சியை எட்டும் வாய்ப்புகள் உள்ளன என எச்டிஎப்சி சொத்து மேலாண்மை நிறுவனத் தின் தலைவர் தீபக் எஸ்.பரேக் தெரிவித்தார்.
பங்குதாரர்களிடையே அவர் மேலும் கூறியதாவது:
கோவிட் 19 தொற் றால், மாபெரும் பாதிப்புகள், உலக அளவில் பொருளாதார சுணக்கம் ஏற்பட்டது.
இந்திய பொரு ளாதாரமும் கடந்த 20-21 நிதியாண்டில் 7.3 சதம் சுணக்கத்தை சந்தித்தது.
கோவிட் 19 தொற்றின் முதல் அலையை விட, இரண்டாவது அலையின் தாக்கம், மிகவும் அதிக மாகவே இருந்தது. இது, 20-21 நிதியாண்டின் இறுதி காலாண்டின் வளர்ச்சியை மிகவும் பாதிப்படையச் செய்தது.
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்பான்மையான மக்கள், தடுப்பூசி பெற்று விடுவர் என்பது இந்த பொருளாதார மீட்சிக்கு காரணியாக அமைந்துள்ளது.
முழு ஆண்டு அடிப்படையில், கோவிட் 19 பொருளாதாரத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கவில்லை.
கடந்த 2021 நிதியாண்டின் காலிறுதி ஆண்டில், ஆரோக் கியமான முதலீடுகள் வளர்ச்சி மற்றும் மத்திய அரசின் உயர் பட்ஜெட் ஒதுக்கீடு, அடிப்படை கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீடு போன்றவை மறு சீரமைப்புக்கு பேரு தவியாக இருந்தது.
இவற்றையெல்லாம் பரிசீ லிக்கும்போது, எங்களது கருத்து, வரும் 2022 நிதியாண்டில் வலுவான ஆண்டாக இருக்கும்.
மீச்சுவல் பண்ட் தொழிலை பொறுத்தவரை, ஒட்டுமொத்த சொத்து மேலாண்மை ஆண்டு அடிப்படையில் 41 சதம் வளர்ச்சியை பெற்று, 31.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மீச்சுவல் பண்ட் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 20.6 சதவீதமாக இருந்தது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவாக 15 சதம் இருந்த போதிலும், பங்குகளை கொண்ட மீச்சுவல் பண்ட் வளர்ச்சி 25 சதவீதமாக இருந்தது.
இந்தியாவில் 50 கோடிக் கும் அதிகமான வருமான வரி நிரந்த கணக்கு எண் கள் இருப்பினும், 2.2 கோடி மட்டுமே மீச்சுவல் பண்ட் முதலீட்டாளர்கள் உள்ளனர்.
எனவே, மீச்சுவல் பண்ட் தொழில் வளர்ச்சி மிக வேகமானதாக இருக்கும்.
இந்த மீச்சுவல் பண்ட் தொழிலை செபி முறைப்படுத்தியுள்ளதோடு மட்டுமின்றி, வளர்ச்சிக்கும் ஊக்கமளித்துள்ளது.
சர்வேதச ஏஜென்சிகள், இந்தியாவின் மீச்சுவல் பண்ட் ஒழுங்குமுறையை வியந்ததோடு, உலகிலேயே சிறந்த வழிமுறைகளை கொண்டுள்ளதாக புகழ்ந் துள்ளன.
சர்வதேச அளவில் கிடைத்துள்ள உள்நாட்டு மீச்சுவல் பண்ட்களின் அங் கீகாரத்தை, அந்நிய நாட்டு முதலீடாக மாற்ற முடியும் என நம்புகிறேன்.
மீச்சுவல் பண்ட் முதலீடு செய்துள்ள பணியாளர்களின் விருப்பத் திற்கு ஏற்ப சமீபத்தில் சீரமைக்கப்பட்ட ஒழுங்கு முறை, சரியான திசையில் செல்ல எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று.
இவ்வாறு அவர் பேசினார்.



