fbpx
Homeபிற செய்திகள்கார்கில் போரின் வெற்றியும், தமிழக வீரரின் பங்கும்

கார்கில் போரின் வெற்றியும், தமிழக வீரரின் பங்கும்

கார்கில் யுத்தம்! பாரத தேசம் தாங்கிய விழுப்புண்! யுத்தம் முடிந்து ஆண்டுகள் 22 உருண்டோடி விட்டாலும் நேற்று நடந்ததுபோல் இன் றும் நம் கண்முன்னால் நிழலா டுகிறது. ஜூலை 26 கார்கில் போரின் வெற்றித் திருநாள்! இந்த நாளில் அந்த நாள் நினை வுகள்…

கார்கில் போர் அல்லது கார்கில் பிரச்சனை, 1999ல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும்.

இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் உள்ள டைகர் மலையில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற் கொண்ட நடவடிக்கை விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது.

பாகிஸ்தான் இராணுவமும், காஷ்மீரி போராளிகளும் பாகிஸ்தானிலிருந்து கட்டுப் பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததே போருக்கு முக்கிய காரண மாகும். போரின் ஆரம்பத்தில் பாகிஸ் தான், பழியை முற்றிலுமாக காஷ்மீரி போராளிகள் மீது சுமத்தியது.

ஆனால், உயிரிழந்த வீரர்களிடமிருந்து கைப் பற்றப்பட்ட ஆவணங்கள் மூல மாகவும், போருக்குப்பின் பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆகியோர் விடுத்த அறிக்கைகள் மூலமாகவும், பாகிஸ்தான் துணை இராணுவப்படையினர், தளபதி அஷ்ரஃப் ரஷீத் தலைமையில் போரில் ஈடுபட்டிருந்தது உறுதியானது.

இந்திய வான் படையின் துணையோடு, இந்தியத் தரைப்படை, பாகிஸ்தான் இராணுவம் மற்றும் போராளிகளால் ஆக் கிரமிக்கப்பட்ட இந்தியப் பகுதி களை மீட்டது.

சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் செயலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் படைகள் இந்தியாவுடனான போரைக் கைவிட்டன.

இப்போரானது, மிக உயர்ந்த மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போருக்கு சிறந்த உதாரணமாகும்.

இதுவரை இந்த போர் மட்டுமே, அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் இரண்டுக்கிடையில் நடந்த நேரடிப் போராகும்.

இந்த நடவடிக்கை, இந்தியா வின் மேக்தூத் நடவடிக்கைக்குப் பாகிஸ்தா னின் பதிலடி என்றும் நம்பப்படுகிறது.

பல முறை பாகிஸ்தான் இராணுவம் இத்திட்டத்தை செயல்படுத்தப் பாகிஸ்தான் தலைவர்களிடம் (ஜியா உல் ஹக் மற்றும் பெனசீர் பூட்டோ) அனுமதி கேட்டும், இது பெரும் போருக்கு வித்திடக்கூடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து அனு மதி மறுக்கப்பட்டு வந்தது.

பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் தாக்குதலுக்கானத் திட்டங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன.

மே 3 கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியிருப்பது அங்குள்ள மேய்ப்பர்கள் மூலம் அறியப்பட்டது. மே 5 இந்திய இராணுவம் கார்கில் பகுதிக்கு ரோந்துக் குழுவை அனுப்பியது; பாகிஸ்தான் வீரர்கள், ஐந்து இந்திய வீரர்களைச் சிறைபிடித்து சித்திரவதை செய்து கொன்றனர்.

மே 9 பாகிஸ்தான் குண்டு வீச்சில் கார்கிலில் இருந்த ஆயு தக்கிடங்கு சேதம் அடைந்தது.

மே 10 திரஸ், கக்சர் மற்றும் முஷ்கோ பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மே மாத மத்தியில் இந்திய இராணுவம் காஷ்மீர் பள்ளத் தாக்கிலிருந்து படை களை கார்கில் பகுதிக்கு அனுப் பியது.

மே 26 ஊடுருவியவர்களுக்கெதிரான வான்வழித் தாக்குதலை இந்திய வான்படை தொடங்கியது.

மே 27 இந்திய வான் படை மிக்-21 மற்றும் மிக்-27 ஆகிய இரண்டு போர் விமானங்களை இழந்தது. வான்படைலெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் வீரர்கள் போர் கைதியாகப் பிடித்துச் சென்றனர்

மே 28 இந்திய வான்படை யின் எம்.ஐ-17 என்ற போர் விமானம் பாகிஸ்தான் படையி னரால் சுட்டு வீழ்த்தப்பட்டது; அதனுள் இருந்த நான்கு வீரர்களும் உயிரிழந்தனர்.

ஜூன் 1 பாகிஸ்தான் தனது தாக்குதலை பலப்படுத்தியது; இந்தியாவின் ழிபி 1கி தேசிய நெடுஞ்சாலை குண்டுவீசித் தாக்கப்பட்டது.

ஜூன் 5 ஊடுருவலில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டி ருப்பது, இறந்துபோன பாகிஸ் தான் வீரர்களிடமிருந்து இந்திய இராணுவத்தால் கைப்பற்றப் பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியானது.

ஜூன் 6 இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது.
ஜூன் 9 படாலிக் பகுதியில் இரு முக்கிய நிலைகளை இந்திய இராணுவம் கைப்பற்றியது.

ஜூன் 11 சீனா சென்றிருந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி பர்வேஸ் முஷாரஃபுக்கும் ராவல்பிண்டியில் இருந்த பாகிஸ்தானின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அஸிஸ் கானுக்கும் நடந்த உரையாடலை இந்தியா இடைமறித்து, ஊடுருவலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தது.
ஜூன் 13 இந்திய இராணுவம், திரஸிலுள்ள தோலோலிங் பகுதியைக் கைப்பற்றியது.

ஜூன் 15 அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கார்கிலில் இருந்து படைகளைத் திரும்பப் பெறு மாறு வலியுறுத்தினார்.

ஜூன் 29 இந்திய இராணுவம், இரண்டு முக்கிய நிலைகளான புள்ளி 5060 மற்றும் புள்ளி 5100 ஆகிய வற்றைக் கைப்பற்றியது.

ஜூலை 2 இந்திய இராணு வம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது.

ஜூலை 4 இந்திய இராணுவம் பதினோரு மணிநேரப் போராட்டத்திற்குப்பின் டைகர் ஹில் பகுதியை மீட்டது.

ஜூலை 5 இந்திய இராணுவம் திரஸ் பகுதியை முழுமையாக மீட்டது. கிளின்டனுடனான சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படை களைத் திரும்பப்பெற ஒப்புக் கொண்டார்.

ஜூலை 7 இந்திய இராணு வம் படாலிக் பகுதியிலுள்ள ஜுபார் என்ற இடத்தைக் கைப்பற்றியது

ஜூலை 11 பாகிஸ்தான் இரா ணுவம் கார்கிலில் இருந்துத் திரும்பத் தொடங்கியது; இந்திய இராணுவம் படா லிக்பகுதி யில் முக்கிய முகடு களைக்கைப் பற்றியது.

ஜூலை 14 இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், விஜய் நடவடிக்கை வெற்றி அடைந்ததாக அறிவித்தார்;

பாகிஸ் தான் அரசுடன் பேச்சு வார்த்தைகளைத் தொடர இந்திய அரசு பல நிபந்த னைகளை முன்வைத்தது ஜூலை கார்கில் பிரச்சனை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் கார்கிலில் இருந்து முற்றிலும் அகற்றப் பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது.

போபர்ஸ் பீரங்கி
போரின் உச்சத்தில் ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற பீரங்கிகளை இந்திய இராணுவம் போர்களத்தினுள் கொண்டு வந்தது.

அவ்வகையில் போபர்ஸ் பீரங்கிகள் கார்கில் போரில் முக்கியப் பங்காற்றின. இந்தியப் படையினர் போபர்ஸ் பீரங்கியைப் பயன்படுத்தித் தங்கள் தாக்குதலை விரிவாக்கினர். ஆனால் பல இடங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக அவற்றை உபயோகப்படுத்த முடியாமல் போனது.

இடப்பற்றாக்குறை நில விய இடங்களில் இந்திய வான்படை வான்வழித் தாக்கு தல் நடத்தியது.

இந்திய வான்படையைச் சேர்ந்த மிராஜ் 2000 எச் ரக போர் விமானங்கள், பாகிஸ்தான் படையினரின் பதுங்குக் குழிகள் மீது குண்டு வீச பயன்படுத்தப்பட்டன. இந்திய வான்படை, மிக்-27 ரக போர் விமானமொன்றை இயந்திரக் கோளாறால் இழந்தது.

இந்திய வான்படையைச் சேர்ந்த மிக்-21 ரக போர் விமானமொன்று பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இந்திய வான்படையைச் சேர்ந்த எம்.ஐ-8 ரக உலங்கு வானூர்தி ஒன்று, பாகிஸ்தான் படையினரின் நில வான் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியானது.

கார்கில் போரில் இந்திய வானபடையால் மிராஜ் 2000 எச் ரக விமானங்கள் பாகிஸ்தான் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டன.

மே 27, 1999 அன்று வான் படை லெப்டினன்ட் நசிகேதா ஓட்டிச் சென்ற விமானம், படாலிக் பகுதியில் இயந்திரக் கோளாறால் வெடித்ததால் அவ்விமானத்திலிருந்து அவர் வான்குடை மூலம் வெளியேறினார்.

அவரைத் தேடிச் சென்ற சுகுவாட்ரன் லீடர் அஜய் அஹுஜாவின் விமானம் பாகிஸ்தான் படையினரின் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பலியானது.

விமானத்திலிருந்து அவர் வான் குடை மூலமாகத் தப்பினாலும், அவரை பாகிஸ்தான் வீரர்கள் சிறைபிடித்து, சித்ரவதை செய்து கொன்றனர்.

பல முக்கிய இராணுவ நிலைகளில் இந்தியா, பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றைக் கையாண்டாலும், பாகிஸ்தான் படையினர் தாக்குதல் எல்லைக்கு அப்பால் இருந்ததால் அவர்களை பின் வாங்கச் செய்வது கடினமான காரியமாக அமைந்தது.

எனவே, இந்திய இராணுவம் பாகிஸ்தான் படையினருக்கு எதிராக நேரடித் தாக்குதல்களை நடத்தியது.

போர்க்களம் உயரமான மலைகளின் (18,000 அடி) உச்சியில் அமைந்தி ருந்தமையால் அவ்வகைத் தாக்குதல்களில் இந்தியப் படைகளால் மிக மெதுவாகவே முன்னேற முடிந்தது. பகல் நேர வெளிச்சத்தில் தாக்குவது அபாயகரமானதால், இந்தியப் படையினர் இரவின் இருளில் ஆனால் கடும் குளிரில் தாக்குதல் நடத்தினர்.

நேரடியாகத் தாக்குவதற்கு பதிலாக, பாகிஸ்தான் படையினரின் போக்குவரத்து வழிகளை அடைத்துக் கொண்டு முற்றுகை இடும் போர் உத்தியும் ஆராயப்பட்டது.

ஆனால் இதைச் செய்வதனால் இந்தி யப்படையினர் எல்லை தாண்டி, பாகிஸ்தான் பகுதிக்குள் செல்ல வேண்டி இருந்தது.

போர் மேலும் பெரிதாகும் என்பதாலும் சர்வதேச நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடும் என்பதாலும் இந்தியா அந்த முறையைக் கையாளவில்லை.

போர் ஆரம்பித்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியப் படையினர் பெரும் பான்மையான பகுதிகளை ஆக்கிரமிப்புக்காரர்களிடம் இருந்து மீட்டனர். அதிகாரப் பூர்வ புள்ளி விவரங்களின் படி, 75% முதல் 80% வரையிலான ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் இந்தியாவின் வசம் வந்திருந்தன.

வாஷிங்டன் ஒப்பந்தப்படி, ஜூலை 4 ம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்ட பின், போர் அநேகமாக முடிவுற்ற போதிலும், சில இடங்களில் பாகிஸ்தான் படைகள் இந்தியப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலைகளிலிருந்து வெளியேறாமல் இருந்தன. மேலும் பாகிஸ்தான் படையினருக்கு ஆதரவாக போரிட்ட ஜிகாத் அமைப்புகள் பாகிஸ்தானின் பின்வாங்கும் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தன; அவை போரட்டத்தைத் தொடர்ந்தன.

இந்திய இராணுவம், தனது இறுதித் தாக்குதலை ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்கியது.

திரஸ் பகுதியில் இருந்து பாகிஸ்தான் படையினர் முழுமையாக வெளியேற்றபட்ட பின், ஜூலை 26-ம் தேதி போர் முற்றிலும் முடிவுக்கு வந்தது.

அந்த நாள் இந்தியாவில் கார்கில் வெற்றி நாள் என்று இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

போரின் முடிவில், 1972-ம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையில் இந்தியாவின் பகுதிகள் என வரையறுக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

தமிழக ராணுவ வீரரின் பங்கு
மேஜர் மாரியப்பன் சரவணன் (Major Mariappan Saravanan) (10 ஆகஸ்ட் 1972 – 29 மே 1999), கார்கில் போரின் போது நாட்டிற்காக இன்னுயிர் நீத்த தியாகியாவார். இவர் இந்திய ராணுவத்தின் மதிப்புமிக்க பீகார் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்தார்.

29 மே 1999 அன்று கார்கில் செக்டரின் படாலிக் பகுதியில் 33 படையினர் மற்றும் நான்கு அதிகாரிகளுடன் நான்கு ஊடுருவல்காரர்களைக் கொன்ற பின்னர் ஊடுருவல் காரர்களால் கொல்லப்பட்டார்.

சரவணன் 10 மார்ச் 1999-ல் நான்கு ஆண்டு இராணுவ சேவையை முடித்திருந்தார்.
மேஜர் சரவணன் கார்கில் போரில் கொல்லப்பட்ட முதல் அதிகாரி ஆவார்.

போதிய தகவல்கள் கிடைக் காதபோதிலும் அவரது தலைமையிலான தாக்குதல் மோதலின் ஆரம்பக் கட்டங்களில் இருந்தது. இவரது நடவ டிக்கைகள் இவரை படாலிக் கதாநாயகன் என்று குறிப்பிட வழிவகுத்தன.

இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் இராமேசுவரம் தீவில் 1972 ஆகஸ்ட் 10-ம் தேதி பிறந்தவர் சரவணன்.

இவரது தந்தை லெப்டினன்ட் கலோனல் ஆதி மாரியப்பன் பெங்களூரில் ஜூன் 19, 1989 அன்று இலங்கையில் பவான் நடவடிக்கையின் போது இந்திய அமைதி காக்கும் படையில் பணியாற்றியபோது சாலை விபத்தில் இறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

சரவணன் இராணுவத்தில் சேர்ந்த பிறகு, கார்கிலுக்குச் செல்வதற்கு முன்பு தமுல்பூர், கூச் பெகர் மற்றும் பூட்டானுக்கு அனுப்பப்பட்டார். இவர் 1996-ல் கேப்டனாகவும், 1999-ல் மேஜராகவும் பதவி உயர்வு பெற்றார்.

கார்கில் போரில் அவரின் பங்கு
கார்கில் போர் வெடித்த போது, பீகார் 1ரெஜிமென்ட் அசாமிலிருந்தது. இவர்களை ஜம்மு-காசுமீரில் உள்ள கார்கில் மாவட்டத்திற்குச் செல்ல உத்தரவிடப்பட்டது.

சரவணனின் சேவையினை பாராட்டும் விதமாக வீர் சக்ரா மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது. இதனைச் சரவணனின் தாய் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

அறக்கட்டளை, நினைவிடம்
சரவணன் பெயரில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது ஏழைகளின் நலனுக்காகவும், சாதி, நிறம், மதம் என்பதில் எந்த பாகுபாடும் இன்றி சமுதாயத்திற்குப் பெருமளவில் சேவையாற்றுகிறது.

மேலும், இது இராணுவத்தில் சேர்ந்து தேசத்திற்குச் சேவை செய்ய இளைஞர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கார்கில் போருக்குப் பின் எட்டு ஆண்டுகள் கழித்து, திருச்சிராப்பள்ளியில் ஆட்சியர் அலுவலக சாலையில் ஒரு நினைவுச்சின்னம் திறக்கப்பட் டது.

இந்த நினைவுச்சின்னம் மேஜர் சரவணன் நினைவு அறக்கட்டளையால் கட்டப்பட் டுள்ளது. 26 ஜூலை 2008 அன்று கார்கில் வெற்றி தின நிகழ்வில், மேஜர் எம். சரவணனின் நினைவாக அஞ்சல் துறை சிறப்பு அட்டையினையும் வெளியிட்டது.

கட்டுரை தொகுப்பாளர்:
முனைவர் ஜி.ஆல்பர்ட அலெக்சாண்டர்,
உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தேசிய மாணவர்படை அலுவலர்
புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளி,
புலியகுளம், கோவை 45.

படிக்க வேண்டும்

spot_img