கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் உக்கடம் பெரிய குளக்கரை நவீனப்படுத்தப்பட்டுள்ளதில் சுற்றுலா மேம்பாடு செய்வது தொடர்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமயம் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில் சுற்றுலாத்துறை இயக்குநர்/தமிழ்நாடு சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் உள்ளனர்.



