‘பிரைம் டே’நிகழ்ச்சிக்கு முன்னதாக 2-ம் கட்ட மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த விற்பனையாளர் கள் தங்களின் தயாரிப்புகளை பிரைம் பேட்ஜில் பட்டியலிட்டு பலன்பெறும் வகையில் அமேசான் இந்தியா நிறுவனம் ‘மல்டி-செல்லர் பிளக்ஸ்’என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மல்டி-செல்லர் பிளக்ஸ் மையங்கள் மூன்றாம் தரப்பு அங்கீகரிக்கப்பட்ட சேவை வழங்குனர்களால் செயல்படும் மையங்கள் ஆகும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அமேசான். இன் உள்ளூர் தொழில் முனைவோருடன் இணைந்து விற்பனையாளர்களுக்கு அவர்களின் சரக்குகளை சேமித்துவைப்பதற்கும், வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை செயலாக்கம் செய்வதற்கும், விற்பனையாளர்களின் சரக்கு போக்குவரத்துக்கும் தேவையான உதவிகளை வழங்கும்.
விற்பனையாளர்கள் தங்கள் இடத்திற்கு அருகில் உள்ள இந்த மல்டி செல்லர் பிளக்ஸ் மையங்களை பயன்படுத்துவதன் மூலம், நகரங்களுக்கு வெளியே உள்ள அமேசான் நிறைவேற்று மையங்க ளுக்கு அவர்களின் தயாரிப்புகளை அனுப்பும் போக்குவரத்து செலவும் மிச்சமாகும்.
கோட்டயம், பானிபட், நெல்லூர், வல்சாத், ஹிசார் போன்ற 100-க்கும் மேற்பட்ட 2-ம் கட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட சிறு நகரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள் ஏற்கனவே மல்டி செல்லர் பிளக்ஸ் மையங்களை பயன்படுத்துகின்றனர். அவர்கள் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெறவுள்ள பிரைம் டே நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து செல்லர் பிளக்ஸ்திட்ட இயக்குனர் ஸ்ரீகாந்த் ஸ்ரீராம் கூறுகையில், 2-ம் கட்ட நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் இருந்து அதிக அளவிலானவிற்பனை யாளர்கள் மின்னணு வணிகத்தில் இணைவதால், மல்டி செல்லர் பிளக்ஸ் மையங்களை சொந்தமாக வைத்திருப்பதற்கும், இயக்குவதற்கும் அவர்கள் சம்பாதிக்கும் வருவாயிலிருந்து பயனடையக்கூடிய மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம். 2-ம் கட்ட மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த விற்பனையாளர்கள் அமேசானை அணுகுவதற்கும் நாங்கள் உதவி செய்கிறோம்.
ஆன்லைனில் பொருட்களை வாங்கும் வாடிக்கையா ளர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதோடு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை டிஜிட்டல் மய மாக்கவும் இந்த திட்டம் உதவும் என்றார்.



