fbpx
Homeபிற செய்திகள்மலைவாழ் மக்கள் கோரிக்கையை ஏற்று 15 நாளில் வீட்டுமனைப் பட்டா விநியோகம் கோவை ஆட்சியர் நடவடிக்கை

மலைவாழ் மக்கள் கோரிக்கையை ஏற்று 15 நாளில் வீட்டுமனைப் பட்டா விநியோகம் கோவை ஆட்சியர் நடவடிக்கை

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் மாவுத் தம்பதி ஊராட்சி புதுப்பதி கிராமத்தில் வசித்து வரும் மலைவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று, இரண்டு வாரங்களில் 15 மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இடுகையைப் பார்க்க

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:
அரசை தேடி மக்கள் சென்ற நிலை மாறி, பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க மக்களைத் தேடி அரசு என்ற நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 27.06.2021 அன்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மதுக்கரை வட்டம் மாவுத்தம்பதி பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

புதுப்பதி பகுதியில் குடியிருந்து வரும் மலைவாழ் மக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 45 குடும்பங்கள் புதுப்பதி நத்தம் என வகைப்பாடு செய்யப்பட்ட பகுதிகளில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

இதில் 30 குடும்பங்களுக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. 15 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படாமல் இருப்பதாகவும் அவர்களுக்கு பட்டா வழங்க ஆட்சியரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இப்பகுதியில் வருவாய் வகைப்பாடு தொடர்பாக கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் உடனடி அறிக்கையினை சமர்ப்பிக்க உத்தரவிட்டதுடன் பட்டா வழங்கிடவும் துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.

அம்மனுக்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டு கடந்த (12.07.2021) அன்று மாவுத்தம்பதி கிராமம் புதுப்பதி மலைவாழ் செட்டில்மென்ட்டில் பகுதியில் வாழும் 15 குடும்பங்களை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

மேலும் பட்டா பெற்றுள்ள மலைவாழ் மக்களுக்கு ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img