fbpx
Homeபிற செய்திகள்ஆக்ஸிஸ் ஃப்ளோட்டர் ஃபண்ட் அறிமுகம்

ஆக்ஸிஸ் ஃப்ளோட்டர் ஃபண்ட் அறிமுகம்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், புதிய நிதி சலுகையாக ஆக்ஸிஸ் ஃப்ளோட்டர் ஃபண்ட் துவங்குவதாக அறிவித்துள்ளது.

குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு சாத்தியமான வட்டி வீத சூழலுக்கு ஏற்றவகையில் இந்த திட்டம் இருக்கும்.

அவர்களின் முதலீட்டுக்கான சிறந்த பார்க்கிங் தீர்வையும் இந்த நிதி வழங்குகிறது. இந்த நிதியை நிதி மேலாளர் ஆதித்யா பகாரியா நிர்வகிப்பார் என்றும் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சந்திரேஷ் நிகாம் பேசும்போது, ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக, முதலீட்டாளர்களுக்கு லாபத்தை உருவாக்குவதற்கான உறுதியான வழிகளை வழங்கும் ஒரு புதிய தயாரிப்பு என நம்புகிறோம்.

ஒவ்வொரு முதலீட்டாளரும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய வெவ்வேறு குறிக்கோள்கள், ரிஸ்க் மற்றும் வேறுபட்ட நேர எல்லைகளை வைத்திருக்கிறார்கள்.

எனவே, எங்கள் முதலீட்டாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல முதலீட்டு விருப்பங்களைத் தனிப் பயனாக்குவதையும் புத்திசாலித்தனமாக வடிவமைப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

அதன்மூலம் வாடிக்கையாளர்களையும் மகிழ்விக்கிறோம். கோவிட் அச்சுறுத்தலுக்கு நடுவே பொருளாதார நிலைகள் படிப்படியாக மேம்பட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன என்றார்.

www.axismf.com http://www.axismf.com/ என்ற வலைத்தளத்தில் செல்லலாம் அல்லது மொபைல் அப்ளிகேஷனை Axis Mutual Fund (அண்ட்ராய்டு / ஆப்பிள்) டவுன்லோட் செய்தும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img