fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்களை துவக்கி...

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்களை துவக்கி வைத்த ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா

தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள 8 காவல் வாகனங்கள் மற் றும் ஒரு நெடுஞ்சாலை ரோந்து வாகனம் என 9 காவல் துறை வாகனங்களுக்கு புதிதாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஆயுதப்படையில் கைதி வழிக்காவல், நீதிமன்ற பணி மற்றும் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படும் 8 காவல்துறை வாகனங்களில் மெமரி வசதி (Inbuilt memory) மற்றும் இரவு நேரங்களிலும் துல்லியமாக வீடியோ பதிவு செய்யும் வசதியுடைய சிசிடிவி கேமராவும், அதேபோன்று தூத்துக்குடி நகர நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் ANPR (Automatic Number Plate Recognition) வசதியுடைய சிசிடிவி கேமரா மற்றும் Verifocal Lense கேமரா எனப்படும் துல்லியமாக Zoom செய்யும் கேமரா உட்பட 3 சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்பட்டு அவற்றை நேரடியாக ரோந்து காவல் வாகனத்தில் இருந்து கண்காணிக்கும் கண்காணிப்பு திரையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆயுதப்படை வாகனங்களில் கைதி வழிக்காவல் மற்றும் இதர பணிகளின் போது வீடியோ பதிவு செய்யவும், அதே போன்று நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் முக்கிய திருவிழாக்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் குற்ற சம்பவங்கள் நடவாமல் தடுக்கவும், சந்தேகப் படும்படியான நபர்களை நேரடியாக கண்காணிக்கவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல் துறை வாகனங்களை தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்வின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி.மதன் உட்பட காவல்துறையினர் மற்றும் ஸ்பிக் உதவி பொது மேலாளர் ஜெயபிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img