ஈரோடு மாவட்டத்திற்கு ஈரோடு மற்றும் பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து தஞ்சாவூர், தேனி, அரியலூர், திண்டுக்கல், வாரூர், கடலூர், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இருந்து வேளாண்மை உற்பத் தியாளர் விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநர்கள், பொதுமேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் 56 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங் களின் இணைப்பதிவாளர் க.ராஜ் குமார், திருச்செங்கோடு வேளா ண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப் பதிவாளர்/ மேலாண்மை இயக் குநர் மதி.ஏ.விஜயசக்தி ஆகி யோர் தலைமை தாங்கினர்.
கோபி சரக துணைப்பதி வாளர் ப.கந்தராஜா, ஈரோடு சரக துணைப்பதிவாளர் மதி.கு.நர்மதா, ஈரோடு வேளாண் மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க துணைப் பதிவாளர்/ மேலாண்மை இயக் குநர் எஸ்.கணேசன், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் மு.பா.பாலாஜி, கூட்டுறவு சார்பதிவாளர் ஆ.பிரபு , பெருந்துறை வேளாண் மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க பொதுமேலாளர் க.பழனிச்சாமி, முதுநிலை ஆய்வாளர் எஸ்.சஞ்சைநந்தன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.



