தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட (TNICDS)(TNICDS)செயலி மூலமாக 81,677 குழந்தைகளில் 4,547 கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையும், 14,940 குழந்தைகளுக்கு மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையும் கண்டறியப்பட்டது.
இதுவரை நடத்தப்பட்ட 747 மருத்துவ பரிசோதனை முகாம்களில் 19,487 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக கண்டறியப்பட்டது. அதில் 37 குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், 165 குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் மருத்துவ உதவியும் அவசியம் என்றும், மீதமுள்ள 19,285 குழந்தைகள் நல்ல நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றது முதல் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் வழியில் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
சமூக நலத்துறை சார்பாக கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை, வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, இடைநிற்றல் மாணவர்களுக்கு தொடர் கல்வி, அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 0-6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாகவும், வயதுக்கேற்ற எடை (ம) உயரமும் இல்லாமல் மெலிந்து காணப்படுகின்றனர்.
இதனை சரி செய்திட 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனையும், மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படுவோருக்கு சிறப்பு ஊட்டச்சத்தினை ஏற்படுத்தி மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது அரசு.ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜிழிமிசிஞிஷி செயலி மூலமாக 81,677 குழந்தைகளில் 4,547 கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையும், 14,940 குழந்தைகளுக்கு மிதமான ஊட்டச்சத்து பற்றாக்குறையும் கண்டறியப்பட்டது.
தொடர்ந்து 3 வாரத்திற்குள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். விடுபட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றில் ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளவர்களின் விபரங்களை TNICDS செயலியில் பதிவேற்றம் செய்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை, சத்துள்ள உணவு வழங்குதல் குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
அவர்களுக்கு பேரீச்சம்பழம், கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய், இணை உணவு, பிஸ்கட், வாழைப்பழம், பால், ராகிமால்ட் உள்ளடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் முகாமில் வழங்கப்பட்டது.
இது நாள் வரை நடத்தப்பட்ட 747 மருத்துவ பரிசோதனை முகாம்களில் 19,487 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களாக கண்டறியப்பட்டது. அதில் 37 குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், 165 குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் மருத்துவ உதவியும் அவசியம் என்றும், மீதமுள்ள 19,285 குழந்தைகள் நல்ல நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
தாய்மார்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதோடு அவர்களை பாதுகாத்திட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு தெரிந்தால், அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பரிசோதித்து, அவர்கள் வழங்கும் ஊட்டச்சத்து உணவுகளை கொடுக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
“சென்னையில் சிகிச்சை
நலம் பெற்றது குழந்தை”
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் பயன்பெற்ற பயனாளி சாத்தான்குளம் வட்டாரம் செட்டிகுளம் குழந்தைகள் மையம் கௌரி கூறியதாவது:
குழந்தை கோகுலனுக்கு மிதமான அளவு ஆஸ்டியம் செகுண்டம் ஏஎஸ்டி, போதுமான விளிம்புகள் இடமிருந்து வலமாக ஷிண்டிங் உள்ளதை தற்போது நடந்து கொண்டிருக்கும் மருத்துவ முகாமில் கண்டறியப்பட்டது.
மேற்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. பின் ICDS – RBSK குழுவும் இணைந்து பெற்றோரை ஊக்கப்படுத்தி சென்னை, எம்ஜிஎம் மருத்துவமனையில், ஏஎஸ்டி சாதனம் மூலம் செய்யப்பட்டு குழந்தை நலமாக உள்ளது.
இத்திட்டத்தினை தந்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
“10 நாளில் தாயை இழந்த சிசு காப்பாற்றியது அரசு திட்டம்”
கயத்தார் சாலைப்புதூரைச் சேர்ந்த சுந்தரம்மாள் கூறியதாவது:
எனது மகள் மீனாவுக்கு திருமணம் முடிந்து 10 வருடத்திற்கு பின் 2021 டிசம்பர் 31-ல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஜனவரி 10-ம் தேதி கழிவறை செல்ல முயன்றபோது, தடுமாறி விழுந்த என் மகள் உயிரிழந்துவிட்டாள் என்று மருத்துவமனையில் தெரிவித்துவிட்டனர். பிறந்த 10 நாளில் தாயை இழந்த என் பேத்தியை எப்படி காப்பாற்றப் போகிறோம் என்ற கவலையில் இருந்தேன்.
அங்கன்வாடி பணியாளர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் உள்ளிட்டோர் வீட்டிற்கே வந்து ஆறுதல் கூறினர். டாக்டர் பரிந்துரைப்படி பால்பவுடர் கூட வாங்க முடியாத ஏழ்மையில் இருந்தேன்.
ஏகம் பவுண்டேசன் மூலம் மாதத்திற்கு 10 பால் பாக்கெட் அனுப்பி வைக்க அவர்கள் ஏற்பாடு செய்தனர். அங்கன்வாடி பணியாளர்கள் அடிக்கடி குழந்தையை பார்வையிட்டு அனைத்தையும் கவனித்துக் கொண்டனர்.
வேலைக்கு செல்ல முடியாத சூழலில் இருந்ததால், மாத செலவுக்காக ரூ.2 ஆயிரம் வரை கொடுத்து உதவினர். மையத்தில் வழங்கப்படும் சத்துமாவும் கொடுத்து, பிற உணவுகளும் கொடுப்பது பற்றி கூறினர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் வாயிலாக இத்திட்டத்தை தந்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
தொகுப்பு:
இரா.ஜெய அருள்பதி,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
எஸ்.செல்வலெட் சுஷ்மா,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தூத்துக்குடி மாவட்டம்.



