fbpx
Homeபிற செய்திகள்7 கொலை, 15 வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டவர் மேட்டுப்பாளையத்தில் கைது போலீசார் அதிரடி

7 கொலை, 15 வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டவர் மேட்டுப்பாளையத்தில் கைது போலீசார் அதிரடி

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்படி மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா, புகையிலை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து அதிரடியாக கைது செய்யப் பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி. செல்வநாகரத்தினத்திற்கு வந்த ரகசிய தகவலின் அடிப் படையில் மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் செல்வநாயகம், தனிப்படை காவலர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் உப்புப்பள்ளம் ரேஷன் கடை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த ஒருவரை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீசாரின் கிடுக் குப்பிடி விசாரணையில் அவன் விருதுநகர் வஉசி வீதியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பதும், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 7 கொலை மற்றும் 15 க்கும் மேற்பட்ட அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் இவன் மீது நிலுவையில் இருப்பதும், இவ்வழக்குகளில் தேடப்பட்டு வந்தவன் என்பதும் தெரியவந்தது.

மேலும், விருதுநகரில் இருந்து தப்பி வந்து கோவையில் உள்ள தனது அண்ணன் கருத்தப்பாண்டி வீட்டில் இருந்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், பொதுமக்களிடமும் கத்தியை காட்டி மிரட்டி வந்ததும் கண்டறியப் பட்டது.

இதனடிப்படையில் மணிகண்டனை கைது செய்த காவல் துறையினர், அவனிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 4 கிலோ கஞ்சா மற்றும் ஒரு பட்டா கத்தியினையும் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து அவனை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
ஜூலை மாதத்தில் மட்டும் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24.400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img