fbpx
Homeபிற செய்திகள்5ஜி தொழில்நுட்பத்தில் வி21இ ஸ்மார்ட்போன் விவோ அறிமுகம்

5ஜி தொழில்நுட்பத்தில் வி21இ ஸ்மார்ட்போன் விவோ அறிமுகம்

விவோ நிறுவனம் வி மாடல் வரிசையில் 5ஜி தொழில்நுட்பத்தில் கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் விவோ ‘வி21இ’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மெல்லிய தோற்றத்தில் மிகக் குறைந்த எடையில் அழகான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.

இதன் பின்புற பேனல் சன்செட் ஜாஸ் மற்றும் டார்க் பியர்ல் ஆகிய 2 வண்ணங்களைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 32எம்பி முன்புற செல்பி கேமராவில் குறைந்த வெளிச்சத்திலும்கூட துல்லியமாக செல்பி எடுக்க முடியும். இதேபோல் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள 64எம்பி கேமரா மூலம் இரவில் மிகத் தெளிவாக படங்களை எடுக்க முடியும்.

4,000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் பிளாஷ் சார்ஜ் உடன் வருகிறது. 8ஜி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் வெளிவந்துள்ள விவோவின் வி21இ ஸ்மார்ட்போன் விலை 24,990 ரூபாய் ஆகும்.

இது இந்தியா முழுவதும் அனைத்து ஷோரூம்கள், ஆன்லைனில் இ-ஸ்டோர், பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம், டாடா கிளிக் மற்றும் பஜாஜ் இஎம்ஐ ஸ்டோர்களிடம் கிடைக்கிறது.

இது குறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் நிபுன் மரியா கூறுகையில், இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் சமீபத்திய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

இதன் சிறந்த வடிவமைப்பு, திறன்மிக்க கேமராக்கள் மற்றும் 5ஜி இணைப்பு ஆகியவை பலதரப்பட்ட ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சிறப்பான ஒன்றாக இருக்கும்.

இது பயனர்களை புதுமையான முறைக்கு அழைத்துச் செல்லும் என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img