தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக 41-வது வார்டில் போட்டியிடும் கே.சாந்திசந்திரன் நேற்று மாலை பி.என்.புதூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தனக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அவ்வாறு வெற்றி பெற செய்தால், 41-வது வார்டு பகுதியில் நகர சுகாதாரம், குடிநீர் வினியோகம், சாலைகள் மேம்பாடு, சாக்கடை கழிவுநீர் பராமரிப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை சிறந்த முறையில் கவனித்துக் கொள்வதாகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்து பணியாற்ற உள்ளதாகவும் கூறி வாக்கு சேகரித்தார்.
அவருடன் தி.மு.க. பகுதி கழக செயலாளர் கே.பாக்கியராஜ், கிளை செயலாளர் தம்பு என்ற சண்முகசுந்தரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சி. தங்கவேல், என். சந்திரன், ஜி.ரமேஷ், உளியம்பாளையம் பாலசுப்ரமணியன் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சந்திரசேகர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகவன் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தோழர்கள் நண்பர்கள் திரளாக இந்த வாக்கு சேகரிப்பில் கலந்துகொண்டனர்.



