fbpx
Homeபிற செய்திகள்இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பிரபா ரவீந்திரனை ஆதரித்து - அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பிரச்சாரம்

இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பிரபா ரவீந்திரனை ஆதரித்து – அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பிரச்சாரம்

கோவை மாநகராட்சி 48 வது வார்டு உறுப்பினர் பத விக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறு மலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய முன்னேற்றக் கழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த பிரபா ரவீந்திரன் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் சாலையில் பிரச்சா ரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று எட்டு மாத காலத்தில், எண்ணற்ற சாதனைகளை செய்து முடித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் 25 ஆயிரம் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

ரூபாய் 200 கோடி மதிப்பீட்டில் சாலைகள் பராமரிப்பு பணிகளும், ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் தெருவிளக்குகள் பணிகளும் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் 10 எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவினராக இருந்தாலும், தமிழக முதல்வர் அவர்கள் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் தன்னுடைய தொகுதிகளாக கருதி பணியாற்றி வருகிறார்.

அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில், கோவை மாநகராட்சி 48 வது வார்டில் போட்டி யிடும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பிரபா ரவீந்திரன் அவர்களுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அவருடன் திமுக மாவட்ட பொறுப் பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாவட்ட துணை செய லாளர் ஆர்.தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

தி.மு.க. சசிகுமார், கேபிள் டி.வி. ராஜேந்திரன், கதிரவன், தனபால், தண்ட பாணி, பகுதி கழக செயலாளர் நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.சுதர்சன், பி.முருகன், மற்றும் கே.ரவீந்திரன், ஆனந்தன், ராஜேந்திரன், கண்ணன், காங்கிரஸ் கட்சியின் சௌந்தர்ராஜன், செபஸ்டியன், சண்முகராஜ், கதிரவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வராஜ், ரமணி, சிவகுமார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img