fbpx
Homeபிற செய்திகள்37வது ஆண்டு நினைவு தினம்: நாராயணசாமி நாயுடு மணி மண்டபத்தில் எஸ்.பி.வேலுமணி, மயூரா ஜெயக்குமார் அஞ்சலி

37வது ஆண்டு நினைவு தினம்: நாராயணசாமி நாயுடு மணி மண்டபத்தில் எஸ்.பி.வேலுமணி, மயூரா ஜெயக்குமார் அஞ்சலி

விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37வது நினைவு தினத்தையொட்டி கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டயம்பாளையம் ஊராட்சி வையம்பாளை யம் கிராமத்திலுள்ள அவரது மணி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், அம் மன் கே.அர்ஜுணன், கே.ஆர். ஜெயராமன், கந்தசாமி, தாமோதரன், ஓ.கே.சின்ன ராஜ், அமுல் கந்தசாமி, முன்னாள் எம்பி ஏ.கே.செல்வராஜ், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி வேட்டவலம் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டு நாராயணசாமி நாயுடுவின் மணி மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் செந்தில் (எ) கார்த்திகேயன், எஸ்.எஸ். குளம் ஒன்றிய சேர்மன் கவிதா சண்முகசுந் தரம், ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ் வரி, ஊராட்சி மன்ற தலை வர்கள் கோவிந்தராஜன், சுபத்ரா புருஷோத்தமன், எஸ்.எஸ். குளம் ஒன்றிய நிர்வாகிகள் சுகுமார், புருஷோத்தமன், சண்முகசுந்தரம், செந்தில், காளப்பட்டி பகுதி செயலாளர் கே.வி.ராஜேந்திரன், விஜய குமார், கார்த்திகேயன், பாலகிருஷ்ணன், குறிஞ்சி மலர் பழனிச்சாமி, ரகுபதி, கோட்டை கௌரி சங்கர் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல வையம்பாளையத் தில் உள்ள நாராயண சாமி நாயுடு மணி மண்டபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கவிமணி, திலகவதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் வையம்பாளையத் தில் உள்ள நாராயண சாமி நாயுடு மணி மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோகரன், மாநில பொதுச்செயலாளர்கள் கணபதி சிவக்குமார், மகேஷ்குமார், மாநில செயலாளர் விஜயகுமார், இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் நவீன்குமார் , பொதுக்குழு உறுப்பினர் சின்னராஜ், மாவட்ட பொ துச்செயலாளர் பழனிச்சாமி, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொதுச்செயலாளர், பரமசிவம், குணசேகரன், சர்க்கிள் தலைவர்கள் மகேந்திரன், ரகுராமன், அசோக் குமார், நிர்வாகிகள் சாமுவேல் தாஸ், கனகராஜ், சகாயராஜ், முருகேசன்,முருகன், தாமு, காட்டூர் சோமு, கோபிநாத் , கலைச்செல்வன், பன்னீர்செல்வம், அருண், சுரேஷ், புருசோத்தமன், பா லாஜி, கிருஷ்ணசாமி, கண் ணன்,அஸ்வின், சக்ரவர்த்தி, இந்துராஜ், அப்பாஸ்,சுகுமார், காசி,மணிக்குமார், தமிழரசன், லீபன், மணி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img