உலக கின்னஸ் சாதனை படைக்க வேண்டி சுற்றுலா விழிப்புணர்வு மற்றும் தேசிய ஓருமைப்பாட்டை வலியுறுத்தும் விதமாக, சென்னை திலீபன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த ஆடம்சன்ராஜ் ஆகிய இருவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்தி சுமார் 35,583 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து விட்டு, இறுதியாக ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.
இருவருக்கும் சுற்றுலா அலுவலகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவர்கள் இருவரும் 7.2.21 அன்று முதல் பாண்டிச்சேரியில் இருந்து பயணத்தை தொடங்கினர்.
இந்தியா முழுவதும் உள்ள முக்கிய இடங்களுக்கு 8 விமான போக்குவரத்து 43 ரயில்கள், 34 பேருந் துகள் மூலமாகவும் 35,583 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து விட்டு ராமேஸ்வரம் வந்தடைந்தனர்.
இவர்களுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் வெங் கடாஜலபதி மற்றும் அதிகாரிகள் இணைந்து வரவேற்பு அளித்தனர்.
இவர்கள் 23 மாநி லங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசம் சென்று வந்துள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த 2018ம் ஆண்டு ஓரிசாவை சேர்ந்த ஓருவர் 29,119 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



