fbpx
Homeபிற செய்திகள்32 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 280 மாணவிகளுக்கு மலபார் கோல்டு நிறுவனம் ரூ.22,80,000 நிதியுதவி

32 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 280 மாணவிகளுக்கு மலபார் கோல்டு நிறுவனம் ரூ.22,80,000 நிதியுதவி

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்-ன் CSR (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) நிகழ்ச்சி, ஈரோடு மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கிளையின் சார்பாக மல்லிகை அரங்கத்தில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர் ஈரோடு மேயர் நாகரத்தினம், அரசுப் பள்ளி மாணவிகளின் நலனிற்காகவும் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 32 பள்ளிகளை சேர்ந்த 280 மாணவிகளுக்கு CSR (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) மலபார் குழுமம் சார்பாக மொத்தம் சுமார் ரூ.22,80,000/- மதிப்பி லான காசோலையை மாணவிகளுக்கு வழங்கினார்.

துணை மேயர் செல்வராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் அய்யனன், எம்-.சி.ஆர். டெக்ஸ்டைல்ஸ் இயக்குநர் ராபின், 36-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார், 27-வது வார்டு உறுப்பினர் ஜெயந்தி, தமிழ்நாடு வணிகர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் சிவநேசன், பிவி பி பள்ளி தமிழ் துறை தலைவர் திருமலை அழகன், மலபார் கோல்டு டைமண்ட்ஸ் ஈரோடு கிளைத் தலைவர் மகமது அஷ்ரப், கிளை துணைத் தலைவர், அஸ்லி, கிளை வர்த்தக மேலாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன்முயற்சிகள் உள்ளிட்டவை காரணங்கள் ஆகும். லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது இந்நிறுவனம்.

படிக்க வேண்டும்

spot_img