fbpx
Homeபிற செய்திகள்300 மாணவ, மாணவிகள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

300 மாணவ, மாணவிகள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

கோவை கோவில்பாளையம் ஒன்றியம் கொண்ட யம்பாளையம் லட்சுமி கார் டன் பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கொண்டயம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணியை கோவில்பாளையம் காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி மற்றும் அனிதா உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க 9வது வார்டு உறுப்பினர் மோகன் வரவேற்று பேசினார். இந்த பேரணி லட்சுமி கார்டன் பகுதியில் இருந்து தொடங்கி வரதயங்கார் பாளையம், செந்தூர் கார்டன், விஸ்வபிரம்மா நகர், மகாலட்சுமி கார்டன், ஐயா கோவில் வழியாகச் சென்றது.

சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கையில் பதாகைகளை ஏந்தி பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற கோஷத்தை எழுப்பியபடிச் சென்றனர்.

முன்னதாக கோவில்பாளையம் ஒன்றிய சேர்மன் அங்குள்ள மளிகை கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று கூறி துணிப்பைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கொண்டயம்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் சின்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் ருக்மணி பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பினர் ப்ரீத்தி வெங்கடேஷ், ஊராட்சி செயலர் பிரகாஷ், திலகவதி, நித்தியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img