நோக்கியா ஜி20 அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது நோக்கியா போன்களை தயாரித்துவரும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம்.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் துணைத் தலைவர் சன்மீத் சிங் கோச்சார் கூறியதாவது: 2021-ல் எங்களது நான்கு மிகமுக்கியமான அறிமுகங்களில் ஒன்று நோக்கியா ஜி20.
ஆற்றல்மிக்க மூன்று அம்சங்கள் மீடியாடெக் ஜி35 ப்ராசசரால் இயக்கப்படும் நோக்கியா ஜி20, மூன்று நாட்களுக்கு நீடித்து உழைக்கும் பேட்டரி ஆயுள் திறன் கொண்டது.
இதனால், கவலை ஏதுமில்லாமல் நீங்கள் விரும்பியதை மேற்கொள்ளலாம். இதில் ஏற்கனவே நிறுவப்பட்ட ஆண்ட்ராய்ட் 11 ஆனது, ஒரு தடையற்ற முறையில், பல்வேறு செயலிகளைப் பயன்படுத்தவும், அவற்றை மாற்றிக்கொள்ளவும் வகை செய்யும்.
முகம் மற்றும் பக்கவாட்டு விரல்ரேகை மூலமாக அன்லாக் செய்யும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
3 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் செக்யூரிட்டி அப்டேட்களையும், 2 ஆண்டுகளுக்கான சாப்ட்வேர் அப்கிரேடுகளையும் வழங்க வேண்டுமென்ற ஹெச்எம்டி க்ளோபலின் அர்ப்பணிப்பு, நம்பகமான ஸ்மார்ட்ஃபோனாக நோக்கியா ஜி20 விளங்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
நோக்கியா ஜி20-ல் ஒரு 48எம்பி க்வாட் கேமராவும், 8 எம்பி முன்புற கேமராவும் உள்ளன. நோக்கியா ஜி20-ன் 3டி நானோ-டெக்சர்டு ரியர் கவர் உங்கள் கைகளை விட்டு எளிதில் நழுவாது என்பதை உறுதிப்படுத்துகிறது.
கருப்பு, வெள்ளை வண்ணங்களில், 4 ஜிபி/64 ஜிபி ரேம் உடன், ரூ.12,999 எனும் மிகச்சிறப்பான விலையில் நோக்கியா ஜி20 கிடைக்கும். Nokia.com/phones தளத்திலும், அமேசானிலும் இதன் விற்பனை தொடங்குகிறது.
நோக்கியா ஜி20-க்கான முன்பதிவு, அமேசான் மற்றும் நோக்கியா.காம் இணையதளத்தில் தொடங்குகிறது என்றார்.
நோக்கியா ஜி20-க்கான சலுகை அமேசான் அல்லது Nokia.com/phones தளத்தில் நோக்கியா ஜி20-யை முன்பதிவு செய்தால், ரூ.500*யை வாடிக்கையாளர்கள் தள்ளுபடியாகப் பெற முடியும் அல்லது புதிதாக நோக்கியா ஜி20 உடன் நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட்டையும் வாங்கினால் ரூ.2,099 வரை சிறப்பு தள்ளுபடியாகப் பெறலாம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.



