fbpx
Homeபிற செய்திகள்ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள் ஸ்டோரி டெல் செயலியில் கேட்கலாம்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதைகள் ஸ்டோரி டெல் செயலியில் கேட்கலாம்

ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட ஆடியோ கதைகளை தமிழ் மொழியில் உள்ளடக்கிய ஸ்டோரி டெல், அதிகமான சந்தாதாரர்களை கொண்ட இ-புத்தக சேவை நிறுவனமாகும்.

கடந்த இரண்டு வருடங்க ளில், கல்கி, சாண்டில்யன், டி.ஜானகிராமன், அசோக மித்ரன், பெருமாள் முருகன் மற்றும் பல தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங் களுக்கு ஆடியோ வடிவில் புத்தகம் வெளியிட்டுள்ளது ஸ்டோரி டெல்,.
பழங்கால மற்றும் சமீபத் திய இலக்கிய படைப்புகளை ஸ்டோரி டெல் தளத்தில் காணலாம்.

கர்ணன் பட புகழ் லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமௌலி, ஆர்.ஜே பாலாஜி வேனுகோபால், கோலிவுட்டின் முன்னணி குரல் நடிகர் சவீதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.

இது குறித்து பேசிய ஸ்டோரி டெல் தமிழின் மொழி மேலாளர் தீபிகா அருண், “ஆடியோ புத்தகங்களை எங்கும் எடுத்துச்செல்லலாம். தாய் மொழியிலேயே புத்தகங் களை வாசிப்பது புது அனுபவத்தை கொடுக்கும்.

புகழ் பெற்ற தமிழ் புத்தகங்களை வாசிக்க நேரமில்லாதவர்களுக்கு ஆடியோ புத்தகங்கள் ஒரு வரப்பிரசாதம் க்ரைம், த்ரில்லர், காதல், சுய முன்னேற்றம் என அனைத்து வகை புத்தகங்களும் கிடைக்கக்கூடிய தளமாக ஸ்டோரி டெல் இருக்கும்.

வெறும் மாதம் 149 ரூபாயில், 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் பல்லாயிரக்கணக்கான ஆடியோ புத்தகங்களை நீங்கள் கேட்டு மகிழலாம்.” என்றார்

கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் ஆகிய தளங்களில் இருந்து ஸ்டோரி டெல் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டோரி டெல் நிறுவனம், பொஃபிபோ மற்றும் ஸ்டோரி டெல் பிராண்டின் கீழ் செயல்பட்டு வருகிறது.

ஆடியோ புத்தக வெளியீடு நிறுவனமான ஸ்டோரி சைட் மற்றும் பிரபல நார்டிக் வெளியீடு நிறுவனங்களான நார்ஸ்டெட்ஸ், பீப்பில்ஸ் பிரஸ் மற்றும் கம்மரெஸ் ஆகியவற்றோடு சேர்ந்து பணியாற்றி வருகிறது.

சுவீடன் ஸ்டாக்ஹோம் நகரை மையமாக கொண்ட ஸ்டோரி டெல் நிறுவனம், சர்வதேச அளவில் 20- க்கும் மேற்பட்ட இடங்களில் இயங்கி வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img