Homeபிற செய்திகள்293 மாணவர்களுக்கு ரூ.44.13 கோடி கல்விக் கடன் கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கல்

293 மாணவர்களுக்கு ரூ.44.13 கோடி கல்விக் கடன் கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கல்

கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா வளாகத்தில் நேற்று முன்தினம் (ஜூன் 18) மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் நடைபெற்ற கல் விக் கடன் மேளா நிகழ்ச்சியில் 14 வங்கிகள் சார்பில் 293 மாணவ, மாணவிகளுக்கு ரூ.44.13 கோடி மதிப்பிலான கல்விக் கடன்களுக்கான ஆணைகளை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி வழங்கினார்.

பின்னர் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் கல்விக் கடன் வேண்டி விண் ணப்பித்த அனைவருக்கும் கல்விக்கடனை வழங்கிட அத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் வழிகாட்டுத லின்படி, கோவை மாவட்டத்தில் கல்விக்கடன் கேட்டு விண் ணப்பித்த 293 மாணவ, மாணவிகளுக்கு ரூ.44.13 கோடி மதிப்பிலான கல்விக் கடன்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.350 கோடி மதிப் பிலான கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பிலான கல்விக் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

மாணவ, மாணவிகளுக்கு அதிக அள விலான கல்விக்கடன் வழங் கிய மாவட்டமாக கோவை மாவட்டம் திகழ தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன் னோடி வங்கியின் மேல £ளர் மற்றும் பிற வங்கி மேலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, மாணவ, மாண விகளின் நலனில் அக்கறை கொண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் கல்விக்கடன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகள் கல்விக் கடன் பெறுவதற்கு தனிப்பட்ட முறையில் வங்கிகளை அணுகி கடன் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால், தாங்கள் பயின்று வரும் கல்விநிறுவனங்கள் மூல மாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டால், கல் விக்கடன் பெறுவதற்கான நடவ டிக்கை மேற்கொள்ளப்படும்.

கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் தனிக் கவனம் செலுத்தி வளர்ச்சி திட் டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார். வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 25,000 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நகர்புற உள் ளாட்சித்துறை அமைச்சர் கோவை மாவட்டத்திற்கு வருகைபுரிந்து, ஆய்வு மேற் கொண்டதுடன், வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் கடந்த காலங்களில் நடைபெற்ற குளறு படிகளை களைந்து, விரைவாக பணிகளை முடித்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் வி.செந் தில்பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, பாரத் ஸ்டேட் வங்கி மூலம் 110 மாணவ -மாணவிகளுக்கு ரூ.15.98 கோடி மதிப்பிலும், கனரா வங்கி மூலம் 61 மாணவ -மாணவிகளுக்கு ரூ.4.74கோடி மதிப்பிலும், பரோ டோ வங்கி மூலம் 34 மாணவ -மாணவிகளுக்கு ரூ.10.26 கோடி மதிப்பிலும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் 27 மாணவ -மாணவிகளுக்கு ரூ.2.34 கோடி மதிப்பிலும், பாரத் யூனியன் வங்கி மூலம் 21 மாணவ -மாணவிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலும், ஆக்ஸிஸ் வங்கி மூலம் 12 மாணவ -மாணவிகளுக்கு ரூ.2.73 கோடி மதிப்பிலும், பேங்க் ஆப் இந்தியா மூலம் 10 மாணவ – மாணவிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலும் , சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மூலம் 5 மாணவ -மாணவிகளுக்கு ரூ.2.07 கோடி மதிப்பிலும், இந்தியன் வங்கி மூலம் 4 மாணவ -மாணவிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பிலும், பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் 4 மாணவ -மாணவிகளுக்கு ரூ.84 இலட்சம் மதிப்பிலும், பெடரல் வங்கி மூலம் 2 மாணவ -மாணவிகளுக்கு ரூ.31 இலட்சம் மதிப்பிலும், சௌத் இந்தியன் வங்கி மூலம் 1 மாணவருக்கு ரூ.14 இலட்சம் மதிப்பிலும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மூலம் 1 மாணவருக்கு ரூ.20 இலட்சம் மதிப்பிலும், பஞ்சாப் அன்ட் சிந்த் வங்கி மூலம் 1 மாணவருக்கு ரூ.54 இலட்சம் மதிப்பிலும், என மொத்தம் 293 மாணவ மாணவிகளுக்கு ரூ.44.13 கோடி மதிப்பிலான கல்விக் கடன் களுக்கான ஆணைகளை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி வழங்கினார்.

கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில், கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் எம்.பிரதாப், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img