உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் நான்காம் ஆண்டாக மகா திறன் மங்கை என்ற தலைப்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி ராயபுரத்தில் உள்ள எம்.கே.எம்.ரிச் ஹோட்டலில் நடைபெற்றது.
முன்னதாக மணியம் எலக்ட்ரிக்கல்ஸ் சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவன தலைவர் இந்திராசுந்தரம் முன்னிலை வகித்தார். திருப்பூர் தெற்கு காவல் துணை ஆணையர் வனிதா, திருப்பூர் மாவட்டம் அவிநாசி கோட்டக் கலால் அலுவலர் ராகவி, பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை விருந்தினர்களாகவும், கிட்ஸ் கிளப் பள்ளி குழும தலைவர் மோகன் கார்த்திக், வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குனர் குமார் துரைசாமி, நடிகர் அருண் குமார் ராஜன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் இரத்த தானம், தாய்ப்பால் தானம், வாழ்நாள் சாதனைகள், விளையாட்டு, பறை இசை, திருநங்கை உட்பட 26 சாதனைப் பெண்களுக்கு மகா திறன் மங்கை விருதுகள் வழங்கினர்.