fbpx
Homeபிற செய்திகள்20ம் தேதி ஒருநாள் அடைப்பு போராட்டத்தில் ‘டாக்ட்’ பங்கேற்பு சங்கத் தலைவர் ஜேம்ஸ் அறிவிப்பு

20ம் தேதி ஒருநாள் அடைப்பு போராட்டத்தில் ‘டாக்ட்’ பங்கேற்பு சங்கத் தலைவர் ஜேம்ஸ் அறிவிப்பு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனை வோர்கள் சங்க (டாக்ட்) பொதுக்குழு கூட்டம் நேற்று கோவை வேலாண்டிபாளையத்தில் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிரதாப்சேகர், பொருளாளர் லீலா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஜே.ஜேம்ஸ் பேசியதாவது:

தொழில் துறைக்கு தேவைப்படும் மூல பொருள்களின் விலை என்பது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக 100 சதத்துக்கும் மேல் உயர்த்தப்பட்டு உள்ளது.

தொழில் துறையினர் கொரோனா தொற்றில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வர துவங்கியதும் கடுமையான மூலப்பொருள்களின் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டனர்.

உற்பத்தி சார்ந்த தொழில் துறையினர் 70 சதத்துக்கும் கீழ் தங்கள் உற்பத்தியைக் குறைந்து கொண்டதால் உற்பத்தி துறை சார்ந்து ஜாப் ஆர்டர்கள், உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் தொழில் கூடங்கள் 95 சதம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஆர்டர்கள் இழந்து செய்வது அறியாமல் தவித்து வருகின்றார்கள்.

இந்த குறுந்தொழில் நிறுவனங்கள் வங்கி கடன், தனியார் கடன், இட வாடகை. தொழிலாளிகளின் சம்பளம் என எதுவும் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு தொழிலை இழக்கும் நிலையில் உள்ளனர்.

நாட்டில் கிட்டதட்ட 40 கோடி பேர்களுக்கு மேல் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் வழங்கி வரும் இந்த தொழில்களை பாதுகாக்கவும், மூலபொருள்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்தவும், விலை நிர்ணய கமிட்டி அமைக்கவும் கோரி வருகின்ற 20 ஆம் தேதி நாடு முழுமையும் ஒரு நாள் தொழில் கூடங்களை அடைக்கும் போராட்டத்தில் டாக்ட் சங்கமும் பங்கு எடுக்க உள்ளது.

குறுந்தொழில்கள் நடத்தி வரும் அனைத்து தொழில் கூடங்களும் அன்றைய தினம் அடைத்து காலை 10 மணிக்கு கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் தொழில் அமைப்புகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img