fbpx
Homeபிற செய்திகள்2021- 22ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்புகள் சேர்க்கை

2021- 22ம் கல்வி ஆண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்புகள் சேர்க்கை

பாரதியார் பல்கலை க்கழகத் துறைகளில் நடத்தப்பட்டு வரும் முதுநிலை பாடப்பிரிவுகளான எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம், எம்.சி. ஏ, எம்.எட், எம்.பி.எட், M.Lib.I.Sc, M.Lib.I.Sc. (Lateral Entry) மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளில் 2021 -2022-ம் ஆண்டின் சேர்க்கைக்கு தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியுடைய மாண வர்கள் மேற்கண்ட பாடப் பிரிவுகளில் சேருவதற்கு விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பேடு, மாணவர்களின் எண்ணிக்கை, கட்டணம், கல்வி உதவித்தொகை, விடுதி வசதிகள் மற்றும் தகவல்களைப் பல்கலைக் கழகத்தின் இணையதள முகவரியான www.b-u.ac.in–ருந்து 28.06.2021 முதல் 15.07.2021 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்யப் பட்ட மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களுக்குரிய விண்ணப்பக் கட்டணம் ரூ.400 (எஸ்சி,எஸ்டி மாணவர்களுக்கு ரூ.200)-க்கான ஆன்லைன்/டிடி/என் இஎப்டி (இணைத்து இணைய வழி வங்கி) மற்றும் இதர சான்றிதழ்களுடன் 15.07.2021 மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக துறைத் தலைவருக்கு இணையத ளம் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.

இறுதி ஆண்டு/ இறுதி பருவம் தேர்வு எழுதியுள்ள மாணவர்களும் விண்ணப் பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். விண்ணப்பங்களைப் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பெறுவதற்கு ரூ.400 (எஸ்சி,எஸ்டி மாணவர்க ளுக்கு ரூ.200)-சாதி சான்று நகல் இணைத்து இணைய வழி வங்கி (என்இஎப்டி) வாயிலாக பதிவாளர், பாரதியார் பல் கலைக்கழகம், கோவை &641046 என்ற பெயரில் செலுத்தப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் இதர சான்றிதழ்களை ஒருங்கிணைப்பாளர், மாணவர் சேர்க்கை 2021&2022, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை 641046 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

எம்பிஏ பாடத்திட்டத்திற்கான மாணவர் சேர்க்கையானது, கோவை அரசு தொழில்நுட்பக் கல் லூரியில் கலந்தாய்வு மூலம் நடைபெறும்.

மேலும் பிற விவரங் களை பெறுவதற்கு 0422-2428160, 0422-2428161, +916385527291 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பல்கலைகழகத்தின் பதிவாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img