fbpx
Homeபிற செய்திகள்20 ஆண்டுகளாக அரியர்:தேர்வு எழுத 33 மையங்கள் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

20 ஆண்டுகளாக அரியர்:தேர்வு எழுத 33 மையங்கள் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

20 ஆண்டுகளாக அரியர் வைத்து, அதை சிறப்பு வாய்ப்பாக வரும் நவம்பர் &- டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளின் போது எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தங்களுக்கான தேர்வு மையத்தை வரும் 18-ம் தேதிக்குள் தேர்வு செய்து கொள்ள வேண்டும் எனவும் வரும் நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டரின் போது தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் வசதிக்காக
மாநிலம் முழுவதும் 33 மையங்கள் அமைக்கப்பட் டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்கள் எந்த மையத்தையும் தேர்வு செய்யவில்லை என்றால், ஏதேனும் ஒரு மையம் ஒதுக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாத இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் இத்தேர்வு, ஆன்லைன் முறையில் இல்லாமல் மாணவர்களுக்கு நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img