பாலியல் வன்கொடுமை காரணமாக, கோவை மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது.
இந்நிலையில் காளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் கணினி ஆய்வகத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், “மாணவி பாலியல் வன்கொடுமை சம்பந்தமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விசாரணைக்காக சென்றபோது, பள்ளி நிர்வாகம் மழுப்பலான பதில் அளித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள் ளோம். பாலியல் சீண்டல் புகார் தொடர்பாக அனைத்து கல்வி நிலையங்களிலும் ஹெல்ப்லைன் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுதொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது.
எனவே, அதுகுறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக, மாணவர்கள் புகார் தெரிவிக்க ஒரு பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படும்“ என்றார்.
மாணவி எழுதி வைத்த கடிதத்தில் இருப்பது யார் என்பது மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில், மாணவி வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தைத் தடயவியல் சோத னைக்கு உட்படுத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
முக்கியமாக, அந்த கடிதத்தில் இருப்பது மாணவியின் கையெழுத்து தானா என்பதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கடிதத்தில் மாணவி குறிப்பிட் டுள்ள மற்ற நபர்கள் குறித்தும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் மாணவி தற்கொலை தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின் விசாரணை நிறைவுபெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பான அறிக்கையை கல்வி அதிகாரிகள் விரைவில் தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.



