fbpx
Homeபிற செய்திகள்17-ம் தேதி பொள்ளாச்சியில் வட்டார இளைஞர் திறன் விழா- ஆட்சியர் சமீரன் வேண்டுகோள்

17-ம் தேதி பொள்ளாச்சியில் வட்டார இளைஞர் திறன் விழா- ஆட்சியர் சமீரன் வேண்டுகோள்

கோவை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில், வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.

இதில் DDUGKY, RSETI, TNSDC திட்டங்களின்கீழ் நடைபெறும் இலவச திறன் பயிற்சியில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்) தகுதியான இலவச பயிற்சியினை தேர்வு செய்து பயிற்சியில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்

.பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் நடைபெறும் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா, பாலக்காடு ரோட்டில் அமைந்துள்ள, என்.ஜி.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 17-ம் தேதி காலை 9 முதல் 4 மணி வரை நடைபெறவுள்ளது.

DDUGKY திட்டத்தின் கீழ் Warehouse Supervisor, Retail Sales Associate, Android Mobile Phone Operator, Assistant Catering Manager, General Duty Assistant, Sewing Machine Operator Knits, Business Correspondent & Business Facilitator ஆகிய பயிற்சிகள் RSETI திட்டத்தின் கீழ்Beauty parlour Management, Women`s Tailor, Candle making, Pickle and Masala Powder, Costume Jewellery, Bee Keeping ஆகிய பயிற்சிகள் மற்றும் TNSDC திட்டத்தின் கீழ் IT-Ites, Apparel, Automotive, Textiles and Handlooms, Healthcare போன்ற Sector-ன் கீழ் பயிற்சிகள் நடைபெற உள்ளன.

இளைஞர் திறன் திருவிழாவில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்கள் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சுயவிவரம், புகைப்படம் மற்றும் இதர தகுதிச் சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்களுடன்) கலந்து கொண்டு பயனடையலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img