fbpx
Homeபிற செய்திகள்150 மலைவாழ் குடும்பங்களுக்கு புகையில்லா அடுப்பு காரமடையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கல்

150 மலைவாழ் குடும்பங்களுக்கு புகையில்லா அடுப்பு காரமடையில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கல்

கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம், கோபனாரி கிராமத்தில் நேற்று (செப்.30) நடைபெற்ற நிகழ்ச்சியில், என்.எம்.சி.டி. தொண்டு நிறுவனம் நபார்டு வங்கியுடன் இணைந்து செயல்படுத்தும் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 150 மலைவாழ் குடும்பங்களுக்கு புகையில்லா அடுப்புகள், சோலார் விளக்குகள், சோலார் மோட்டார் களை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கா.ராமச்சந் திரன் தெரிவித்ததாவது:
என்.எம்.சி.டி தொண்டு நிறுவனம் நபார்டு வங்கியுடன் இணைந்து 1000-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்களுக்கு கால் நடைகள் வழங்குவதன் மூலம் வாழ் வாதாரத் திட்டங்களை ஏற்படுத்தி அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது.

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பணிகளுக்கு நீராதாரம் இன்றியமையாத தேவையாக இருப்பதால், ஆழ்குழாய் மற்றும் சோலார் மோட்டார் மூலம் நீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

இத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கத்தோடு கூடப்பட்டி, சொரண்டி, கீழ் கொரவன்கண்டி, மேல் கொரவன்கண்டி, சிறுகிணறு, பூச்சமரத்தூர், தோண்டை, வீரகல் மற்றும் கோரப்பதி கிராமங்களில் சோலார் மோட்டார், சோலார் விளக்குகள் மற்றும் புகையில்லா அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மலைவாழ் மக்கள், அண்மைக் காலங்களில் பல தரப்பட்ட வாழ்வாதார பணிகளில், ஈடுபட்டு வருகிற சூழ்நிலையில், அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, 150 மலைவாழ் குடும்பங்களுக்கு புகையில்லா அடுப்புகளையும், சோலார் விளக்குகளும் வழங்கப்பட்டன.

அரக்கடவு, குட்டையூர், செங் குட்டை, மானார், கெத்தைக்காடு, நீராடி, கடம்பன்கோம்பை, பரளிக்காடு, கொடியூர், பூதப்பள்ளம், எழுத்துக்கள் புதூர், சேத்துமடை, விளாமரத்தூர், வேப்பமரத்தூர் ஆகிய 14 கிராமங்களில் சோலார் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற திட்டங்களின் மூலம் இப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைகிறது. இத்திட்டத்தை செயல்படுத்திவரும் இந்நிறுவனத்திற்கு எனது பாராட்டுகள்.

இவர்கள் பணி மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கே.கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img