வேலூர் வி.ஐ.டி பல் கலைக்கழக வளாகத்தில் 11வது சர்வதேச யோகா தினம் சிறப்பாக மற்றும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த நிர்வாகிகள் அகாடமி (APCA) இயக்குநர் பி. பிரதீப், வி.ஐ.டி துணைவேந்தர் டாக்டர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் டாக்டர் பார்த்தசாரதி மல்லிக், உடற்கல்வி இயக்கு நர் டாக்டர் மங்கையர்கரசி அருண், இணை இயக்குநர் டாக்டர் தியாகசந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பேராசிரியர்கள், ஊழி யர்கள், கார்னாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் காங்கேயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்று, பல்வேறு யோகாசனங்களை செய்து அனைவருக்கும் யோகா வின் உடல் மற்றும் மன நலம் மேம்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்து ரைத்தனர்.