fbpx
Homeபிற செய்திகள்கோவை எம் இன் ஹோட்டலில் 1 டன் கிறிஸ்துமஸ் கேக் கலவை கலக்கும் திருவிழா: டாக்டர்...

கோவை எம் இன் ஹோட்டலில் 1 டன் கிறிஸ்துமஸ் கேக் கலவை கலக்கும் திருவிழா: டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் பங்கேற்பு

கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்குகளுக்கான மூலப்பொருள்கள் கலவை கலக்கும் திருவிழா கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் சாய்பாபா கோவில் எதிரில் அமைந்துள்ள எம் இன் ஹோட்டலில் நடைபெற்றது.


பாரம்பரியமாக நடைபெறும் இந்த விழா, கிறிஸ்துமஸ் விழாவிற்கான துவக்க விழாவாக கருதப்படுகிறது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மார்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ், இயக்குனர் மற்றும் சர்வதேச ரோட்டரி 3206-ன் உதவி ஆளுநர் டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் கலந்து கொண்டார்.

விழாவுக்கு எம் இன் ஹோட்டல் பொதுமேலாளர் ஆர்.சுசின், தலைமை செப் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் எம் இன் ஹோட்டலை சேர்ந்த செப்கள், ஹோட்டல் அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கேக் தயாரிக்கும் கலவையுடன் முந்திரி, பாதாம் செதில்கள் மற்றும் பிஸ்டாச் சியோ, ஆரஞ்சு தோலுரித்தல், கறுப்பு கரும்பு, அத்திப்பழம், உலர்ந்த உப்பு, இலவங்கப்பட்டை மற்றும் கிராம்புகள் ஆகியவை சேர்க்கப்பட்டு இந்தக் கலவையை விழாவில் நிறுவனங்களில் பணியாற்றுவோர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

இவற்றுடன் பானங்கள், பொன் னிறப்பாகு. தேன் மற்றும் வெண்ணிலா சாரம் போன்றவற்றை கலந்து இந்த கேக் கலவையை 1 டன் கிலோ எடை வரும் வரை கேக்குகள் செய்வதற்காக மூலப் பொருள்களை சரியான விகிதத்தில் கலந்தார்கள்.

இந்தக் கலவை கிறிஸ்துமஸ் வரை காற்று புகாத பைகளில் அடைத்து வைத்து, கேக் தயாரிக்கப்படும்.

படிக்க வேண்டும்

spot_img