புதுமையான உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ நிறுவனம், மிகவும் மெல்லிய தோற்றத்துடன் கூடிய ஒய்33 எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
மறக்க முடியாத தருணங்களை படம் பிடிப்பதற்காக 50எம்பி பின்புற கேமராவுடன் வெளிவந்துள்ள ஒய்33 எஸ்ஸ்மார்ட்போன், உயர்வ ரையறை புகைப்படத்தை மறுவரையறை செய்கிறது .ஒவ்வொருகாட்சிகளையும் துல்லியமாக எடுக்க உதவுகிறது.
8ஜிபிரேம் மற்றும் 128 ஜிபி மெமரிகார்டுடன் வெளிவந்துள்ள இதன் விலை 17,990 ரூபாய். இது 1டிபி மெமரிகார்டு மற்றும் 4ஜிபி« ரமை நீட்டிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.
மிரர்பிளாக், மிட்டேட்ரீம் ஆகிய 2 வண்ணங்களில் வெளிவந்திருக்கும் ஒய்33எஸ் விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம், டாடாகிளிக், பஜாஜ் பின்செர் வ்இஎம் ஐஸ்டோர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆப்லைன் ஸ்டோர்களிலும் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் கிடைக்கிறது.
திரைப்படங்களைப் பார்க்கும்போதும், கேம் விளையாடும் போதும் துல்லியமாக இருக்கும் வகையில் 16.71செமீ (6.58’’) புல்எச்டி+ (2408*1080) டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்திருக்கிறது.
கண்களை பாதிக்காத வகையில் இதில்பில்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜருடன் வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் எந்தவித இடையூறும் இல்லாமல் பொழுதை போக்கசிறந்த ஒன்றாக இருக்கும்.
இதுமீடியா டெக்ஹீலியோஜி80 ஆக்டாகோர் புராசசர் மற்றும் பன்டச்ஓஎஸ் 11.1 அடிப்படையிலான ஆன்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது.
இதுகுறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் நிபுன் மரியா கூறியதாவது:
புதியஒய்33 எஸ்ஸ்மார்ட்போன், 50 எம்பிசூப்பர் நைட்கேமரா, மிகவும் மெல்லியவடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த 5000எம்ஏஎச் பேட்டரிபோன்ற முக்கிய அம்சங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
விவோஒய்33எஸ் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 182 கிராம்.



