சென்னை எழிலகத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 2021-2022ம் ஆண்டு வேளாண் துறையின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்துவது குறித்தும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி, வேளாண் பொறியியல் துறை முதன்மை பொறியாளர் முருகேசன் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.



