fbpx
Homeபிற செய்திகள்வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ஆட்சியர் அழைப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் சமீரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம்(யு.ஒய்.இ.ஜி.பி.) மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2021&2022 ஆம் நிதியாண்டில் கோவை மாவட்டத்துக்கு இந்த திட்டத்தின் கீழ் 65 தொழில் திட்டங்களுக்கு ரூ.45 லட்சம் மானியம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிதியாண்டில் கொரோனா காரணமாக இந்த திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் விரைவில் தொழில் தொடங்குவதற்காக நேர்முக தேர்வில் இருந்தும், தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் இருந்தும் செப்டம்பர் 30 வரை தமிழ்நாடு அரசு விலக்கு அளித்துள்ளது.

எனவே குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயது பூர்த்தியடைந்த, கோவையில் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு குறையாமல் தொடர்ந்து வசித்து வருபவர்கள், குடும்ப ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீட்டிலும், சேவை, வியாபாரத் தொழில்களை அதிகபட்சம் ரூ.5 லட்சம் முதலீட்டிலும் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தமிழக அரசு சார்பில் 25 சதவீத மானியம், அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 89255 33932 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img