fbpx
Homeபிற செய்திகள்வேலூர் மாநகராட்சியில் சுகாதார அலுவலர் ஆய்வு

வேலூர் மாநகராட்சியில் சுகாதார அலுவலர் ஆய்வு

வேலூர் மாந கராட்சியில் மலேரியா நோய் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நட வடிக்கையாக வீடு, வீடாக ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

வீடுகளில் பயன் படுத்தாத பொருட்களில் மழை நீர் தேங்கினால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க மாநகராட்சி சுகாதார அலுவலர், மாவட்ட மலேரியா நோய் தடுப்பு அலுவலர் முனுசாமி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

வார்டு 16 காகிதப்பட்டறை சாரதி நகர் பகுதியில், கொசு ஒழிப்புப் பணியா ளர்களின் பணியை ஆய்வு செய்தனர்.

மழைக்காலம் என் பதால் பயன்படாத பொ ருட்களில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகும். அது போன்ற பொ ருட்களை அகற்றும் படி அறிவுறுத்தினர்.

வீடுகளில் உள்ளவர்களுக்கு வீட்டை சுற்றியும் மாடி மேல் மழை தண்ணீர் தேங் காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மாநகராட்சி பொது சுகாதார மேலாளர் சரவணன் மற்றும் பலர் ஆய்வின்போது இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img