டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்ததை கொண்டாடும் விதமாக தமிழக பா.ஜ.க. சமூக ஊடக பிரிவினர் சார்பில் மாநில செயலாளர் ராமானுஜம் யாதவ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவு போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஹரியானாவைச் சேர்ந்த 23 வயது மேஜர் நீரஜ் சோப்ரா,இறுதி போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
நாடு முழுவதும் இருந்து தங்கபதக்கம் வென்ற மேஜர் நீரஜ் சோப்ராவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை, மாநில பொது செயலாளர் ஜி.கே.செல்வகுமார், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆலோசனை படியும், மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் வழிகாட்டுதலின் படியும், தமிழக பா.ஜ.க. சமூக ஊடக பிரிவு சார்பாக கோவையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப் புகள் வழங்கப்பட்டது.
மாநில சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் ராமானுஜம் யாதவ் தலைமையில் நடைபெற்றது.
லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம், பழயூர் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில், அரசு தொடர்பு பிரிவு மாநில துணைத் தலைவர் ஓம் ஆனந்த், இளைஞரணி செயலாளர் ராம்போ கோகுல், சமூக ஊடகப் பிரிவு நிர்வாகி மகேஷ் மற்றும் மண்டல இளைஞரணி கோகுல், பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.



