fbpx
Homeபிற செய்திகள்வேலம்பாளையம் ஊராட்சி மங்கலப்பட்டியில் வளர்ச்சிப் பணி-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

வேலம்பாளையம் ஊராட்சி மங்கலப்பட்டியில் வளர்ச்சிப் பணி-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வேலம் பாளையம் ஊராட்சி மங்கலப்பட்டியில் மேற் கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களை நேரில் சந்தித்து, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற் கொண்டார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் தெரி வித்தாவது: தமிழக மக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.

ஊரகப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கண்டறிந்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத் தியுள்ளார்.

கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடி நீர் விநியோக திட்டங்கள், தெரு விளக்கு பராமரிப்பு, ஊராட்சிகளின் மூலம் அடிப்படை வசதிகளுக்கான நிறைவேற்றப்படும் திட்டங்கள், ஊரக குடியிருப்பு திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், ஊரக தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை கோரும் பணியாளர் களுக்கு முறையான வேலை வழங்குவது, வேலைக்கான ஊதியத்தை குறித்த நேரத்தில் வழங்குவது, உட் கட்டமைப்பு வசதிகள் குறித்து வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வேலம் பாளையம் ஊராட்சி மங்கலப்பட்டியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து, துறை அலுவலர்களுக்கு நட வடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட் டிற்கு விரைவில் வழங்க அறிவுறுத்தப்பட் டுள்ளது.

இவ்வாறு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img