விவசாயம் தொடர் பான ஆலோசனைகளை வழங்கும் விதமாக விவ சாயிகளுக்கான இலவச செயலி ‘பிக் ஹாட்’ கோவையில் இன்று அறி முகம் செய்யப்பட்டது.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களின் விளைச்சலை அதிகரிக்கும் விதமாகவும், விளை பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் விதமாகவும் பிக் ஹாட் என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த செயலியின் அறிமுக விழா கோவையில் இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண் மைப் பல்கலைக்கழகத்தின் மரபுசாரா எரிசக்தித் துறை சிறப்பு நிலைப் பேராசிரியர் புகழேந்தி இந்த செயலியை அறிமுகப்படுத்தி வைத் தார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது :இந்தி யாவின் மிகப்பெரிய டிஜிட்டல் வேளாண் உட்பொருட்கள் செயல் தளமான பிக் ஹாட் என்ற செயலி தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.
விவசாயிகள் உற் பத்தி செய்யும் விளை பொருட்களின் விளைச் சலை அதிகப்படுத்தும் விதமாக இந்த செயலியில் தொடர்ந்து ஆலோசனை வழங்கும்.மேலும் அந்தந்த பகுதியின் மண் தன் மைக்கு ஏற்ற பயிர்கள் குறித்தும் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யும்.
ஒரு பயிர் பாதிக்கப்பட் டால் அதை படம்பிடித்து செயலியில் பதிவு செய்தால், தாவர வியலாளர்கள் செடியின் பாதிப்பு தன்மை குறித்து அதற்கு அளிக்கவேண்டிய ஊட்டச் சத்துக்கள் ஆலோசனை வழங்குவார் கள்.
மேலும் விவசாயிகள் தங்கள் விளை பொருட் களை கிசான் பஜார் என்ற இணைய பக்கத்தின் மூலம் விற்பனை செய்யும் முறையும் இதில் உள்ளது.
இந்த செயலி விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக அறிவியல் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து விஞ்ஞான மு¬ றயில் விவசாயம் செய்ய உதவும். இவ்வாறு அவர் கூறினார்.



