fbpx
Homeபிற செய்திகள்வடகிழக்கு பருவமழை தீவிரம்- கனமழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தீவிரம்- கனமழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9ம்தேதி உருவாவதால், தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரு கிறது. இதனால் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம் விளைந்த நெற்பயிர்கள் எல்லாம் தண்ணீர் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்து வருவதால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் இடை விடாத தூறலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த அக்டோபர் 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேலும் தற்போது, மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரண மாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதவிர தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும் 9ம்தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதாவது, இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலு டன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோன்று, வரும் 9ம்தேதி வரை டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் தீபாவளி நாளன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

முக்கியமாக டெல்டா மாவட்டங்களிலும் குமரி, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய கடலோர மாவட் டங்களிலும் கனமழை பெய்தது. இந்நிலையில் தமிழ் நாட்டில் இன்று 7 மாவட் டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இன்றும், நாளையும் வங்கக்கடல் பகுதிகளான மேற்கு மத்திய வங்க கடல் மற்றும் அதை ஒட் டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று, இன் றும், நாளையும் அரபிக் கடல் பகுதிகளான கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு னர் புவியரசன் எச்சரித்துள்ளார்.

இந்தநிலையில் வட கிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img