fbpx
Homeபிற செய்திகள்ரோட்டில் தவறவிட்ட ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

ரோட்டில் தவறவிட்ட ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

கோவையில் சாலையில் தவற விட்டுச்சென்ற 50 ஆயிரம் பணத்தை எடுத்த ஆட்டோ டிரை வர், ஆர்எஸ் புரம் சப் இன்ஸ்பெக்டரிடம் ஒப்ப டைத்தார். அவருக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நேற்று காலை 11 மணி அளவில் கோவை ஆர்.எஸ் புரம் அருணாச்சல ரோட்டில் யாரோ தவறவிட்ட ரூ.50.000 பணத்தை கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுநர் சங்க துணைத் தலைவர் விஜயகுமார் கீழே கிடந்து எடுத்தார்.

இதனையடுத்து பணத்தை எடுத்தவுடனே கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுநர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளர் வணங்காமுடியிடம் தகவல் தெரிவித்தார்.

உடனே வணங்காமுடி நிர்வாகிகளிடம் தகவல் கொடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் பணத்தை ஒப்படைக்கச் சென்றனர். அவர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் அதைக்கொடுக்கச் சொன்னார்.

உடனே அங்கு சென்று உதவி ஆய்வாளர் ஆனந்தஜோதியிடம் பணத்தை ஒப்படைத்தார்கள். கீழே கிடந்த பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பொதுமக்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img