fbpx
Homeபிற செய்திகள்ரோட்டில் சுற்றித்திரிந்த 9 மாடுகளை பிடித்துச்சென்ற கோவை மாநகராட்சி

ரோட்டில் சுற்றித்திரிந்த 9 மாடுகளை பிடித்துச்சென்ற கோவை மாநகராட்சி

கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை சுற்றித்திரிந்த 9 மாடுகளை பிடித்த மாநகராட்சி அதிகாரிகள் அவற்றை வஉசி உயிரியல் பூங்காவில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சுங்கம் மற்றும் உக்கடம் பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்த பகுதிகளில் கால்ந¬ டகள் சாலைகளில் நடமா டுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் இருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகர £ட்சி யிடம் பலமுறை புகார் கூறியுள்ளனர்.

மாநகராட்சி சார்பில் கால்நடை உரிமையாளர்களிடம் எச்சரிக்கை விடுத்த நிலையிலும் மாடுகளை சாலையில் திரியவிட்டதால் மாநகர £ட்சி ஊழியர்கள் நேற்று அதிரடியாக சுங்கம் மற்றும் உக்கடம் பகுதிகளில் சாலையோரம் சுற்றித்திரிந்த 9 மாடுகளை பிடித்துச் சென்றனர்.

இவற்றை வ.உ.சி உயிரியியல் பூங்காவில் கட்டி வைத்தனர். மேலும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து அவற்றை ஒப்படைக்க உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img